நாய் கறி பேச்சு.. நான் ஏன் ஒப்பிட்டேன் தெரியுமா.. ஆர்எஸ் பாரதி கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகாலாந்து மக்கள் நாய் கறி சாப்பிடுவது குறித்து ஆர்எஸ் பாரதி சர்ச்சையாக பேசியதாக ஆளுநர் ரவி குற்றம்சாட்டி வீடியோவும் வெளியிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்திற்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு நாகாலாந்து நாய் கறி சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "தமிழ்நாடு கவர்னர் ரவி அவர்கள், டுவிட்டரில் எனக்கு பதில் சொல்கிற வகையில் அல்லது அறிவுரை சொல்கிற வகையில் ஒரு ட்விட்டர் செய்தி போட்டிருக்கிறார். தமிழில் நான் பேசியதால், முதலில் கவர்னருக்கு நாம் பேசிய முழு பேச்சையும் தமிழிலே மொழிப்பெயர்த்து அதற்கு பிறகு ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.

Nagaland dog meat row: DMKs RS Bharathi explains RN Ravis comments

இருந்தாலும் அவர் வெளியிட்டுவிட்ட காரணத்தினால், நானும் ட்விட்டரிலே அவருக்கு பதில் அளித்துவிட்டேன்.. இன்றைய தினம் ஆளுநர் கொடுத்துள்ள செய்தி, தமிழ்நாட்டில் எடுபடாது.. வடமாநிலத்தில் உள்ளவர்களிடம் திராவிட முன்னேற்ற கழகம் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு, பிரதமர் மோடியில் இருந்து அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் பேசியதை வைத்து கொஞ்ச நாட்கள் காலம் ஓட்டினார்கள்.. இப்போது நான் பேசியதை மாற்றி கவர்னர் ரவி பரப்புகிறார்.. இவர் கவர்னராக நாகாலாந்தில் இருந்தவர்.. இவர் ஏன் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார் என்பது பல பேருக்கு தெரியவில்லை.. அதை எடுத்து சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்..

2019இல் இருந்து 2021 வரை நாகாலாந்தின் கவர்னராக ரவி அவர்கள் இருந்தார். 2020ல் இவர் ஒரு சட்டத்தை நிறைவேற்றுகிறார். அதாவது நாகாலாந்து மக்கள் நாய்கறி சாப்பிடக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வருகிறார். அந்த சட்டதை கொண்டு வந்ததால் தான், அங்குள்ள நாகாலாந்து மக்கள் எல்லாம் கிளர்ந்து எழுந்தார்கள். இது தான் கவர்னர் ரவியை நாகலாந்தில் இருந்து விரட்டுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆகவே அன்றைக்கு அந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டு, 2021ல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

இதனிடையே கவர்னர் ரவி போட்ட சட்டத்திற்கு எதிராக நாகாலாந்து மக்களில் ஒருவர், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அவர் நாய்கறி வியாபாரம் செய்கின்ற ஒரு வியாபாரி ஆவார். நாய் இறைச்சி கடை வைத்திருக்கும் அவர், என் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நடைபெற்று 2023 ஜூன் 8ம் தேதி கவுகாத்தி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பிலே நாகாலாந்து மக்களுக்கு நாய்கறி சாப்பிடுவது என்பது அவர்களின் கலாச்சாரத்துடன் பின்ணிப்பிணைந்த ஒன்று. ஆகவே அதற்கு தடை விதிக்க முடியாது என்று ரவி ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டத்தை ரத்து செய்து கவுகாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..

உண்மை நிலவரம் இப்படி இருக்க, அவர்களுக்காக இவர் கண்ணீர் வடிப்பது போல் நீலி வேசம் போடுகிறார். இதை நாகாலாந்து மக்கள் நம்ப மாட்டார்கள்.. யாரும் நம்ப மாட்டார்கள்.. ஆளுநர் எனது பேச்சை முழுமையாக கேட்ட வேண்டும். அப்போது தான் ஏன் ஒப்பிட்டேன் என்பதை புரிந்து கொள்ள முடியும்" இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+