ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...!
சென்னை: நாகை மாவட்டத்தில் அரசு திட்டங்களை கேட்டுப்பெறுவதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கிறாராம் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ..
நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, பூம்புகார், கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற ஓ.எஸ்.மணியன் அமைச்சராக உள்ளார். நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற தமிமுன் அன்சாரி உறுப்பினராக உள்ளார்.

கெட்டிக்காரத்தனம்
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தனது தொகுதிக்கு அரசுத்திட்டங்களை கேட்டுப்பெறுவதில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுகிறாராம்.

அடிக்கடி விசிட்
ஊரில் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்லும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. முதல்வர் அறிவித்த எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதனை நாகையில் முதலில் செயல்படுத்துங்கள் என அதிகாரிகளை விடுவதில்லையாம். அவர்களோ அமைச்சர் தொகுதியான வேதாரண்யத்திற்கு முன்னுரிமை தருவதா, தமிமுன் அன்சாரிக்கு முன்னுரிமை தருவதா என புலம்புகிறார்களாம்.

மத்தளத்திற்கு இரு பக்கம்
அமைச்சர் தொகுதியான வேதாரண்யத்தையும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதியையும் விட்டுவிட்டு நாகைக்கு முன்னுரிமை அளித்தால் அவர்களது கோபத்திற்கு ஆளாக நேரிடும், தமிமுன் அன்சாரியோ நேரடியாக முதலமைச்சரிடமே முறையிடுவேன் என்கிறார், இதனால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் உள்ளோம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

முதல்வரின் ஆதரவு
இதனிடையே நாகை தொகுதியில் மட்டும் இதுவரை 222 குளங்கள் குடிமராமத்துப் பணிகளின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், 100 குளங்களை தூர் வார கோருகிறாராம் தமிமுன் அன்சாரி. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு முதலமைச்சரின் ஆதரவு உள்ளதால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் கட்சியினரிடையே தவிக்கிறாராம்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications