முற்றும் மோதல்.. அண்ணாமலை கூட்டிய கூட்டத்தை.. புறக்கணித்த நயினார் நாகேந்திரன்.. நிலைமை கைமீறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த முதல் தமிழ்நாடு பாஜக கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்ளாதது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

2024 லோக்சபா தேர்தலின் போது பாஜகவின் நயினார் நாகேந்திரன் 4 கோடி ரூபாய் பண பறிமுதல் விவகாரத்தில் சிக்கினார். இதில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர் .நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதே வழக்கில் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் பாஜக நிர்வாகி முரளி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Nainar Nagendran did not attend BJP meeting called by Annamalai amid the trouble in Rs 4 Cr issue

என்ன நடந்தது?: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் சில பாஜக நிர்வாகிகள் மாட்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு மிகப்பெரிய நெருக்கடி தற்போது இந்த வழக்கில் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைதானவர்கள், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு உள்ள எம்எல்ஏ எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் இவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திட்டம் என்ன?: சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் இந்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்யப்பட்டு உள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் செய்யப்பட்ட விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்கு உள்ள எம்எல்ஏ எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் இவர்கள் ரயிலில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மறுப்பு; முன்னதாக தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை., என்று பாஜக நெல்லை வேட்பாளர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

முழு பின்னணி; கடந்த ஏப்ரல் 6ம் தேதி லோக்சபா தேர்தலுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் ரூபாய் 4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.. லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பணம் நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர்.

இந்த பணம் எந்தக் கட்சி சார்பாக, எந்த வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் அதிகார்பூர்வமாக இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் விசாரணையில் பெறப்பட்ட முதல்கட்ட தகவல்கள் மட்டுமே தற்போதைக்கு வெளியாகி உள்ளன.

முற்றும் மோதல்: இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனை மாட்டி விட்டதே பாஜகவை சேர்ந்த யாராவதாக இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த முதல் தமிழ்நாடு பாஜக கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்ளாதது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முதல்நாள் தமிழக பாஜக சார்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அதன் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள, முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகும் இது .

அண்ணாமலை தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று இதில் ஆலோசனை செய்யப்பட்டது. கட்சியில் நிர்வாகிகள் இடையே
கருத்து வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் அதை களையும் வகையில் ஆலோசனை செய்தனர். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அண்ணாமலை பேச்சு; இதில் பேசிய அண்ணாமலை, தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம். கீழே இருப்பவர்கள் மேலே போகலாம். அதைப் பற்றி எல்லாம் நாம் கவலை கொள்ளக்கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம் என்றார்.

இந்த கூட்டத்தில் எச் ராஜா டூ தமிழிசை சௌந்தரராஜன் உட்பட எல்லோரும் கலந்து கொண்டும் கூட நயினார் நாகேந்திரன் கலந்துகொள்ளவில்லை. நயினார் நாகேந்திரன் பாஜகவில் "சிலர்" மீது கோபத்தில் இருக்கிறார். டாப்பில் இருக்கும் ஒருவர் மீது கோபத்தில் இருக்கிறார் என்றெல்லாம் கூறப்படும் நிலையில் அவர் பாஜக கூட்டத்தை புறக்கணித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+