சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லகண்ணுவின் முகத்தை.. தீயால் பொசுக்கிட்டாங்க.. மீசையே இல்லை.. ஆனாலும் அசரலையே.. கர்ஜித்த வைகோ

நல்லகண்ணு பிறந்தநாளைக்கு வைகோவின் வாழ்த்துரை பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிய பேச்சு, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. நல்லகண்ணுவை மலைஉச்சிக்கு அழைத்துச்சென்று, மலையிலிருந்து உருட்டி கொலை செய்துவிடுவோம் என்று அவரை பயமுறுத்தினார்கள்.. முகத்தை பொசுக்கினார்கள்.. ஆனால் கொஞ்சம்கூட அசரலையே என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெருமிதம் தெரிவித்துள்ளார்..

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.. இதில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு, நல்லக்கண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தன்னுடைய வாழ்த்துரையை வழங்கினார்.

காரையும் கட்சிக்கு கொடுத்து.. 1 கோடி ரூபாய் பணத்தையும் கட்சிக்கு கொடுத்தவர் நல்லகண்ணு -வைகோ புகழாரம் காரையும் கட்சிக்கு கொடுத்து.. 1 கோடி ரூபாய் பணத்தையும் கட்சிக்கு கொடுத்தவர் நல்லகண்ணு -வைகோ புகழாரம்

 வைகோ சபாஷ்

வைகோ சபாஷ்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, "தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரம் ஆகியவற்றின் மறுபெயர்தான் நல்லகண்ணு. இந்த நாளில்தான், 97 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நல்லகண்ணு பிறந்தார்... இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது... இதே நாளில்தான், சீனப் புரட்சியாளர் மாவோ பிறந்தார்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணியின் நினைவுநாளும் இன்றுதான்..

 நல்லக்கண்ணு

நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் யெலாளராக 13 வருடங்கள் செயலாற்றியவர் நல்லகண்ணு. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே, பொதுவுடைமைக்கொள்கையால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல தியாகங்களைச் செய்தவர்... நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. நல்லகண்ணுவை மலைஉச்சிக்கு அழைத்துச்சென்று, மலையிலிருந்து உருட்டி கொலை செய்துவிடுவோம் என்று அவரை பயமுறுத்தினார்கள்..

 பொசுக்கிட்டாங்க

பொசுக்கிட்டாங்க

நெல்லை சதி வழக்கில் அவரைச் சிக்க வைத்து, அவருக்கு விலங்கு மாட்டி சித்ரவதை செய்து, அவரது மீசையையும், கன்னத்தையும் தீயிட்டு பொசுக்கி காவல்துறை வெறித்தனமாக நடந்து கொண்டதைக் கண்டு அவரது தாயார் மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்தார். இவரை மலை உச்சிக்கு கொண்டு சென்று கீழே உருட்டித் தள்ளி கொலைசெய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டினார்கள். இவைகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்காமல், பாறையைப் போல துணிச்சலுடன் அந்த அடக்குமுறைகளை எதிர்கொண்ட தியாக வேங்கைதான் தோழர் நல்லகண்ணு..

 வைகோ

வைகோ

அவருக்கு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்' விருதுடன் 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த 10 லட்சம் ரூபாயை தனது பாக்கெட்டில் இருந்த 5,000 ரூபாயையும் சேர்த்து தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு தந்தவர் நல்லகண்ணு. தமிழ்ச்சான்றோர் பேரவை அவருக்கு கார் வழங்கியது... அதையும் அவர் கட்சிக்கு கொடுத்துவிட்டார். இப்படிப்பட்ட தியாகசீலர்களைப் பார்ப்பது அரிது" என்று பேசியிருந்தார் வைகோ. முன்னதாக, முதல்வர் பேசியபோது, "பாசிச பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். அதற்கு நீங்கள் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்.. தமிழ்நாட்டில் உங்களால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நீங்கள் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்து, தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

 பக்கபலம் நீங்கதான்

பக்கபலம் நீங்கதான்

நல்லகண்ணுவை பொறுத்தவரை, பொதுவாழ்வில் 7 வருடம் சிறை தண்டனையை அனுபவித்தவர். அப்போது ஜெயிலில் நல்லகண்ணுவை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் சிறைஜெயிலர்கள்.. மேலும் அவரது மீசையை கையாலேயே பிடுங்கி பிடுங்கி எடுத்த நிகழ்வுகளும் உண்டு.. இதன்காரணமாகவே நல்லகண்ணுக்கு கடைசிவரை மீசையே முளைக்கவில்லை.. பலமுறை ஜெயிலுக்கு போன சிறைவாசி என்பதால் யாருமே இவருக்கு பெண் தர முன்வரவில்லை. அப்போது சாதிஒழிப்பு போராளி ஒருவர் மட்டும் தன் மகளை பெண் கொடுக்க முன்வந்தார். அந்த பெண்தான் மறைந்த ரஞ்சிதம் அம்மாள்.

 நிழல் ஒழுக்கம்

நிழல் ஒழுக்கம்

சாதி ஒழிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பலர் கொல்லப்பட்டனர். அதில் நல்லகண்ணுவின் மாமனாரும் ஒருவர். இதனால் அரசு அவரது மறைவிற்கு இழப்பீடு பணம் தந்தது. ஆனால் நல்லகண்ணு அந்த பணத்தை, அதே போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த 2 குழந்தைகளின் படிப்புக்காகவே தந்துவீட்டார் என்பது பலரும் அறியாத உண்மை.. இதுவரை எந்த எதிரிகளையும் சம்பாதிக்காத மென்மை போக்கை உடைய நல்லகண்ணுவின் நிழல் கூட ஒழுக்கமானது..!!!

English summary
Nallakkannu birthday and MDMK Vaiko greets nallakannu on his birthday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X