திடீர் உடல்நலக் குறைவு! அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன நாஞ்சில் சம்பத்! நலம் விசாரித்த முதலமைச்சர்!

நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் பற்றி முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் அட்மிட் ஆகியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக நாஞ்சில் சம்பத்தின் மகனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாஞ்சில் சம்பத்தின் உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.

நரம்பியல் பிரச்சனை காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த திராவிட இயக்க பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்காக பரப்புரை செய்த இவர், இப்போதும் திமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு யூடியூப் சேனல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். ஒரு காலத்தில் திமுகவை கடுமையாக எதிர்த்து பேசி வந்த நாஞ்சில் சம்பத், முதல்வர் ஸ்டாலினின் அனுகுமுறையால் தனது நிலைப்பாட்டை மாற்றி திமுக ஆதரவு குரல் கொடுக்கத் தொடங்கினார்.

நரம்பியல் பிரச்சனை

நரம்பியல் பிரச்சனை

இந்நிலையில் இவருக்கு நரம்பியல் ரீதியான பிரச்சனை இருந்து வருவதால் அவ்வப்போது அது தொடர்பான பாதிப்புக்கு ஆளாகி வருகிறார். இதனிடையே நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை குமரி மாவட்ட திமுகவினர் மூலம் அறிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், உடனடியாக நாஞ்சில் சம்பத் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து தைரியம் அளித்திருக்கிறார்.

நாஞ்சில் சம்பத் மகன்

நாஞ்சில் சம்பத் மகன்

இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு; ''முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.1.2023) உடல்நலக்குறைவால் கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.''

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

''மேலும், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்களையும் தொடர்புகொண்டு, நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தினார். ''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+