"முதல்வர் ஸ்டாலின் தயவுடன்தான் இது நடக்குதா?".. கொந்தளித்த பாஜக.. கேள்வி கேட்ட நாராயண் திருப்பதி
பாஜகவை விமர்சித்தவர்களுக்கு நாராயண் திருப்பதி பதிலடி தந்துள்ளார்
சென்னை: "திமுக நிர்வாகத்தில் தமிழக அரசு நடக்கிறது... மோசடி, முறைகேடுகள், மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, கொலை,கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை முதல்வர் ஸ்டாலின் தயவுடன் நடைபெறுகிறது என்று நாங்களும் சொல்லலாமா? என்று பாஜகவின் நாராயண் திருப்பதி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்திற்கு 2 கண்டெய்னர்கள் சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளது..
அதில், ஆப்கன் போதைப் பொருட்கள் ஏராளமான இருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கண்டெய்னர்கள்
இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், 2 கண்டெய்னர்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.. அவைகளில் இருந்தவற்றின் மாதிரிகளையும் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதியில் தடயவியல் ஆய்வில் அந்த கண்டெய்னர்களில் போதை பொருள் இருந்தது என்பது உறுதியானது.

துறைமுகம்
ஆப்கானிஸ்தானிலிருந்து டால்கம் கற்கள் என்று பெயரில், அவை ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. அங்குள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கின்றனர்... பிடிபட்ட 2 கண்டெய்னர்களிலும் இருக்கும் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். சுமார் 3,000 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது.

மோடியின் நண்பர்
ஹெராயின் பிடிபட்டுள்ள முந்த்ரா துறைமுகத்தை அதானி நிறுவனம் நிர்வகிக்கிறது. மோடியின் நண்பர் அதானிக்காக மோடி அரசு பல்வேறு சலுகைகள் வழங்குவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் நிலையில் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் ஹெராயின் பிடிபட்டுள்ளதால், காங்கிரஸ் நிர்வாகிகள் ட்விட்டரில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்...

சலுகைகள்
ஏற்கனவே அதானிக்காக மோடி அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், இந்த விவகாரம் அடுத்த பிரச்சனையை கிளப்பி உள்ளது. ஆனால், ' மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்' என்பதை பார்த்து பாஜகவினர் கொந்தளித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

ட்வீட்
அதில், "திமுக நிர்வாகத்தில் தமிழக அரசு நடக்கிறது. மோசடி, முறைகேடுகள், மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, கொலை,கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை முதல்வர் ஸ்டாலின் தயவுடன் நடைபெறுகிறது என்று நாம் கேட்கலாமா? இது போன்ற முட்டாள்தனமான செய்தியை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார். அத்துடன், பாஜகவை சாடி வெளியான செய்தி லிங்க்கையும் தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ளார் நாராயண்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications