சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை, மாமல்லபுரம் விசிட்.. முழு நிகழ்ச்சி நிரல் இதோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    Xi Jinping's India Visit Complete Schedule | தமிழகம் வரும் சீன அதிபர் பயணத்தின் முழு விவரம்-வீடியோ

    சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்க உள்ளனர்.

    சென்னை மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே நடைபெற உள்ள இந்த சந்திப்பை அதிகாரபூர்வமற்ற சந்திப்பு என்று அழைக்கிறார்கள். ஏனெனில், இந்தச் சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கையெழுத்தாகாது. இரு நாட்டு உறவை வலுப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கும் நடுவேயான தொடர்பை வலுப்படுத்தவும்தான் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    Narendra Modi and China President Xi Jinping meeting schedule

    இதோ சீன அதிபரின் பயண விவரம்:

    • நாளை, 11ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
    • மதியம் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார்.
    • சீன அதிபர் பிரத்யேகமாக பயன்படுத்தும், குண்டு துளைக்காத கார் இதற்காக நேற்றே சென்னை வந்துள்ளது
    • ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு, அங்கிருந்து மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்திற்கு புறப்படுவார்.
    • பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் மாலையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளனர்.
    • மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள் உள்ளிட்ட புராதான சின்னங்களை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.
    • நாளை இரவு ஜி ஜின்பிங்கிற்கு, மோடி இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • 12ம் தேதி காலையில் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் 2ம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். பிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.
    • நாளை மறுநாள், மதிய உணவை முடித்துக்கொண்டு மதியம் 2 மணிக்கு ஜி ஜின்பிங் நேபாளம் புறப்படுகிறார்.
    • மோடி மட்டுமல்லாது, ஜி ஜின்பிங்கை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் சந்திப்பார்கள். சீன தரப்பில் அந்தநாட்டு, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் முக்கிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    English summary
    Prime Minister Modi and Chinese President Xi Jinping are scheduled to meet in Mamallapuram tomorrow. The two leaders will visit a number of tourist attractions in Mamallapuram and enjoy art shows.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X