Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நத்தம் புறம்போக்கு நிலம்.. வீட்டுவரி ரசீது எங்கே? சென்னை மேயர் பிரியாவிடமே கேட்ட திமுக கவுன்சிலர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களே கோரிக்கை எழுப்பியிருந்தனர்.. இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்தில் மிக நீண்ட விவாதமும் நடைபெற்றுள்ளது.

மேயர் பிரியா தலைமையில் நேற்று சென்னை மாமன்ற கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. அத்துடன், சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

squatter lands natham land chennai chennai corporation

சென்னை மாநகராட்சி முழுவதும், வாகனங்களில் சென்று கொசு மருந்து அடிக்க ரூ.2.77 கோடி ஒதுக்கீடு, மண்டலம் 4, 8 போன்றவற்றில் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது, ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை 4 ஆண்டுகள் கண்காணிக்க ரூ.19.97 கோடி ஒதுக்கீடு, ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டன.

நேற்றைய தினம் நடந்த நிகழ்வில், நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களே முன்வைத்திருக்கிறார்கள்.

கவுன்சிலர்கள்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நத்தம் புறம்போக்கு நிலத்திலிருக்கும் வீடுகளுக்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் திமுக கவுன்சிலர்கள், கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, திமுக நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன் பேசும்போது, "சென்னை மாநகராட்சியில் மூன்று கமிஷனர்கள் மாறிய பின்பும் இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.. இதனால் ஒரு லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார்.. அதற்கு மேயர் பிரியா, "இது தமிழ்நாடு அரசு சம்மந்தப்பட்டது. நாம் இதில் எதுவும் செய்ய முடியாது" என்று பதிலளித்தார்.

ஆக்கிரமிப்பு வீடுகள்: உடனே இடைமறித்து பேசிய நிலைக்குழு தலைவர் தனசேகரன், நாங்கள் ஒன்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு வரிவிதிக்கவேண்டும் என சொல்லவில்லையே.. நத்தம் புறம்போக்கிலும், மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்திலும் குடியிருக்கும் மக்களின் வீடுகளுக்குத்தான் வரிவிதிக்க வேண்டும் என்கிறோம்.

தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ள திட்டப்படி ஆன்லைன் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு கூட வரி வசூல் செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் ரெட் பார்ம் வழங்கப்பட்டது. நீர் நிலைகள் அல்லாத பகுதிகளில் வரி வசூல் செய்யலாம் என்ற நிலை இருந்தது. என்னுடைய பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு இப்போது வீட்டு வரி வசூல் செய்யப்படுவதில்லை

ஆன்லைன் பட்டா: 2 ஆண்டுகளாக "ரெட் ஃபார்ம்" வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.. முதல்வர் கொடுத்த ஆன்லைன் பட்டாவுக்கே வரி விதிக்காமல் இருப்பது சரியா?'' என்று தனசேகரன் கேட்டார்..

உடனே துணைமேயர் மகேஷ்குமார், "நீர்நிலை ஆக்கிரமிப்பு தவிர்த்து, எப்போது வேண்டுமானாலும் அரசுக்கு தேவைப்படும்போது அந்த நிலத்தை எடுத்து கொள்ளலாம் என்ற அபிடவிட்டுடன் எடுத்து கொடுப்பவர்களுக்கு வரி வசூல் செய்வது குறித்து முடிவெடுக்கலாம்.. அதுவரை மக்கள் அந்த இடத்தில் வரிகட்டி வாழலாம் என்ற பழைய நடைமுறைக்கு மீண்டும் அனுமதிக்க வேண்டும்" என்றார்..

விவாதங்கள்: இப்படியே விவாதங்கள் வெடித்த நிலையில், மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் "ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் தற்போது வரி வசூல் செய்ய முடியாது. அதே நேரம் மாநகராட்சி நிலமாக இருந்தால் நாம் அரசின் அனுமதியை கேட்க வேண்டியதில்லை. எனவே அரசின் அனுமதி கிடைத்ததும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் பட்டா வாங்கியவர்களுக்கும் வரி வசூல் செய்யவில்லை என்றார்கள். இதற்கான பட்டியலை மாவட்ட நிர்வாகம் சேகரித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரும் புள்ளி விவரங்கள் கிடைத்ததும், அரசுக்கு கடிதம் எழுதுவோம்.. ஒருவாரத்தில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவெடுக்கப்படும்!" என்றார்

வெளிநடப்பு: இறுதியில், மாமன்றக் கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றும்போது, திடக்கழிவு மேலாண்மைத் துறையில் உள்ள தூய்மை பணிகள், குப்பைகள் தரம்பிரித்தல், வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பணிகளை தனியாருக்குவிடும் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று ஆட்சேபித்தும், தீர்மானத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும், கோஷமிட்டபடியே திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது பரபரப்பை தந்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+