அனுமதி பெறாமல் ஆலை விரிவாக்கம்! சன் பார்மாவிற்கு குட்டு வைத்த பசுமை தீர்ப்பாயம்.. ரூ 10 கோடி அபராதம்
சென்னை: ஆலை விரிவாக்க பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறாத காரணத்தினால் சன் பார்மாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்த பார்மா வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி செயல்பட்டு வரும் நிலையில், ஆலை விரிவாக்கத்திற்கு முறையான அனுமதி பெறவில்லையென புகார் எழுந்திருந்தது.
இந்த புகாரை கடந்த 2020லிருந்து விசாரித்து வந்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது

அனுமதி இல்லை
1992ல் தொடங்கிய சன் பார்மா, செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகே 3.72 கி.மீ தொலைவில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தற்போது மருந்து உற்பத்தி 25.5 டன்னாக இருக்கிறது. இந்த உற்பத்தியை 134 டன்னாக முடிவெடுக்கப்பட்ட நிலையில் ஆலையின் விரிவாக்கத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால், இதற்கு முறையான அனுமதியை பெறவில்லையென புகார் கூறப்பட்டு வந்தது.

சரணாலயம்
தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் இது குறித்து தியாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஆலை தனது விரவாக்க பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதாவது, தமிழ்நாட்டில் வன உயிரின அல்லது பறவைகள் சரணாலயங்களை சுற்றியுள்ள 5 கி.மீ பரப்பளவும் சரணாலயமாகவே கருதப்படும். அவ்வாறு இருக்கையில் இந்த பகுதியில் எப்படி விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம் என தியாகராஜன் தனது மனுவில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இடைக்கால தடை
மேலும், சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை மேற்கொள்ள தேசிய வன உயிர் வாரியத்தின் அனுமதி அவசியம் என்று இருக்கையில் சன் பார்மா நிறுவனம் இதுவரை இந்த அனுமதியை பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கடந்த மே மாதம் சன் பார்மா ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. அதேபோல 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு முறையான அனுமதி பெறவில்லையென்றும் ஆலை மீது தியாகராஜன் குற்றம்சாட்டியிருந்தார்.

அபராதம்
இந்த அனுமதி விவகாரம் தொடர்பாக விசாரித்த பசுமை தீர்ப்பாயம் தற்போது சன் பார்மாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது. அதாவது, 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு EIA NOTIFICATION 1994ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. கடந்த 1994ல்தான் சுற்றுசூழல்தாக்க அறிவிக்கை விதிகள் உருவாக்கப்பட்டதாகவும் ஆனால் கடந்த 1992லிருந்து நிறுவனம் இயங்கி வருவதால் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனம் சார்பில் தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த தீர்ப்பாயம் தற்போது மேற்குறிப்பிட்ட அபராதத்தை விதித்திருக்கிறது.

நிலத்தடி நீர் மாசு
ஏற்கெனவே இந்த ஆலை சுற்று புறத்தில் உள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளதாக சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு ஆய்வு செய்து கூறியிருந்தது. அதேபோல இந்த மாசு தொடர்பாக ஆய்வு செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சார்பில் குழு ஒன்றும் கடந்த 2020ல் அமைக்கப்பட்டது. இந்த குழுவும் ஆய்வு செய்து மாசு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்து ரூ.58.2 லட்சம் இழப்பீடு சன் பார்மா நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும் என்று கூறியிருந்தது.

தீர்ப்பு
தற்போது இதனையடுத்து ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகை மாசு கட்டுப்பாடு வாரியம் பெற்று அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தொடர்ந்து விதி மீறல்கள், மாசு போன்றவற்றை சன் பார்மா ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications