சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. 11 இடங்களில நடக்கிறது.. விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் இன்று (ஜன.2) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் தொடங்கியது - வீடியோ

    கொரோனா தொற்று பரவுவதை போடப்பட்ட லாக்டவுன் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
    தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேநேரம், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் வேகமாக முயற்சி நடக்கிறது.

    தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு மருந்துகள் இந்தியாவில் சோதனையில் உள்ளன. இதில் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனேகாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை செய்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சினுக்கு கூடுதல் தகவல்களை நிபுணர் குழு கேட்டுள்ளது.

    நாட்டில் 30 கோடி மக்களுக்கான தடுப்பூசி செலவை மட்டுமே அரசு ஏற்கும்.. கொரோனா தடுப்பு குழு தலைவர்!நாட்டில் 30 கோடி மக்களுக்கான தடுப்பூசி செலவை மட்டுமே அரசு ஏற்கும்.. கொரோனா தடுப்பு குழு தலைவர்!

    தடுப்பூசி ஒத்திகை

    தடுப்பூசி ஒத்திகை

    இந்த சூழலில் இன்று முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடுவதற்காக தன்னார்வளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடக்கிறது. தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த ஒத்திகை முகாம்கள் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள் ஆகிய 11 இடங்களில் இன்று ஒத்திகை நடைபெறுகிறது.

    தயார் நிலை

    தயார் நிலை

    முதற்கட்டமாக 25 நபர்களை வைத்து நாளை காலை 9 மணிக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    21,000 செவிலியர்களுக்கு

    21,000 செவிலியர்களுக்கு

    கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2600க்கு மேற்பட்ட குளிரூட்டப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பு சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21,000 செவிலியர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    English summary
    As per Centre’s order, all states and UTs are set to test the Covid-19 vaccination roll-out plan by conducting a dry run at minimum three designated centres on Saturday. Here’s all you need to know about the nationwide Covid-19 vaccine dry run on Saturday:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X