நவாஸ் கனி விசுக்னு சொல்லிட்டாரே.. டிட்டோ "அவரை" போல.. காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்குமா? கவனிக்குது பாஜக
சென்னை: காங்கிரஸ்தான் எப்படியும் ஆட்சி அமைக்க போகிறது என்ற ஆரூடத்தை முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.. இது பாஜகவுக்கு டென்ஷனை உண்டாக்கி வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.. அவர் பேசும்போது, "எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் செய்து, தேர்தலில் பிரச்சனையை உண்டுபண்ணலாம், தோல்வி பயத்தில் மதக்கலவரம் செய்யலாம் என்றெல்லாம் பாஜக நினைக்கிறது..

மதக்கலவரம்: 100 இடங்கள் கூட கிடைக்காது என்று பாஜவுக்கு தகவல் கிடைத்ததுமே, இப்போது இஸ்லாமியர்களை பற்றி புகழ்ந்து பேசி, அவர்களிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதாவது, மோடி சரணடைந்திருக்கிறார். பாஜக வெறுப்பு அரசியலுக்கான கட்சியாகும்.. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், மனித நேயத்திற்கு எதிரானது என்பதால், இதை உடனடியாக அகற்ற வேண்டும்.
ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஒவ்வொரு வித அரசியல் பேசுகிறார் பிரதமர் மோடி. முதல்கட்ட தேர்தலில், மோடி எருமை மாடு அரசியல் பேசினார்... 2ம் கட்டத்தில் பாகிஸ்தான் அரசியல் பேசினார்... 3ம்கட்ட தேர்தலில் பிரிவினை வாதத்தை பற்றி பேசினார்... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒருவர் சொத்தை இன்னொருவருக்கு கொடுத்து விடுவார்கள் என்று கூறினார். இப்போது 4ம்கட்ட தேர்தல் முடிந்த பிறகு, இஸ்லாமியர்களை நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறுகிறார்.
குட்டிக்கரணம்: மோடி மற்றும் பாஜவின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. வாக்குகளுக்காக மோடி குட்டிக்கரணம் அடிக்கிறார். இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய அவர்களின் சித்தாந்தம் மாறி இன்று உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். இதை இசுலாமியர்கள் யாரும் நம்பக் கூடாது என்று காட்டமாக கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகை கூறிய அதே கருத்துக்களை நவாஸ் கனியும் வெளிப்படுத்தியிருக்கிறார்.. மதத்தை வைத்து மட்டுமே அரசியலை சந்திக்க முடியும் என்ற கோட்பாட்டை பாஜக கையில் எடுத்துள்ளது என்று ஐயூஎம்எல் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி குற்றம்சாட்டியுள்ளார்.
ஹஜ் பயணம்: ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்வது வழக்கம்.. இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம், இன்று ஆரம்பமாகி உள்ளது.. எனவே, இந்த ஹஜ் பயணத்தில் செல்வோருக்கான பயிற்சி முகாமும், வழியனுப்பும் நிகழ்ச்சியும் சென்னை எழும்பூரில் நேற்றைய தினம் நடந்தது.. தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கலந்து கொண்டார்.. பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி, "நம்முடைய பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் பதற்றத்தில் பிதற்றிக்கொண்டே இருக்கிறார்.. தேர்தல் நேரத்தில், பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை என்ன பேசினார் என்பது எல்லாருக்குமே தெரியும். இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம் மன்னர்களை எல்லாம் புகழ்ந்து பேசி வருகிறார்.
காங்கிரஸ்: மதத்தை வைத்து மட்டுமே அரசியலை சந்திக்க முடியும் என்ற கோட்பாட்டிலே, நாடு முழுவதும் பலவிதமான பிரச்சாரங்களை பாஜகவினர் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், பாஜகவின் எந்த ஒரு திட்டமும் கை கொடுக்க போவதில்லை.
எப்படியும் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்க போகிறது என்பது பாஜகவினருக்கே நன்றாக தெரியும். அதனால்தான் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்" என்றார்.
இந்த முறை தேர்தலில், எப்படியும 400 சீட்களை வென்றுவிட வேண்டும் என்பதிலும், ஹாட்ரிக் வெற்றியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்பதிலும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக கடுப்பு: இதற்காகத்தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு தேர்தல் வியூகங்களையும் வகுத்து, தேர்தலிலும் களமிறங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வருவது பாஜகவை எரிச்சலூட்டி வருகிறது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
ஜி போதும் இறங்குங்க! ரோடு ஷோ முடிந்தும் கவனிக்காமல் இருந்த எடப்பாடி.. அலர்ட் செய்த மோடி -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
மேற்காசிய போருக்கு நடுவே.. திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. ஆலோசித்தது என்ன?












Click it and Unblock the Notifications