சீ இதான் பிரச்சினையே! தனுஷுக்காக பணம் வாங்காமல் நடித்த நயன்தாரா! நட்பில் விரிசல் விழ காரணம் என்ன?
சென்னை: தனது திருமண குறித்த ஆவணப் படத்தை வெளியிடுவதற்காக 'நானும் ரவுடி தான்’ படத்தில் இருந்து பாடல்கள், சில காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் ஆனால் தனுஷ் மறுத்துவிட்டதாக கூறிய நடிகை நயன்தாரா, வெறும் மூன்று நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தன்னிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டதாக தனுஷ் மீது பரபரப்பு புகார் கூறியிருக்கிறார். கடந்த காலங்களில் ஒரு பாடலுக்கு தனுஷுக்காக பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்த நயன்தாராவுக்கும், நட்பாக இருந்த தனுஷுக்கும் விரிசல் வர என்ன காரணம் என்பது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தற்போதைக்கு சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதே காலத்தில் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் தான் நடிகை நயன்தாரா. ஐயா உள்ளிட்ட படங்களில் சீனியர்களுடன் நடிக்க ஆரம்பித்த அவர் அதற்கு பிறகு எஸ்ஜே சூர்யா, சூர்யா, ஜெயம் ரவி என தனது டிராக்கை மாற்றிக் கொண்டார்.
தற்போதைய சூழலில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் போடா போடி படத்துக்கு பின் வாய்ப்பில்லாமல் இருந்த விக்னேஷ் சிவனுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ். அவரது தயாரிப்பில் நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நயன்தாரா. நண்பர் என்ற அடிப்படையில் அவரது தயாரிப்பில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதற்கு முன்னரும் பல படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.
நன்றாக சென்று கொண்டிருந்த நட்பு இப்போது விரிசலை சந்தித்து இருக்கிறது. விக்னேஷ் சிவன் நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் குறித்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தில் இருவரும் சந்தித்து பேசிய நிலையில் இது குறித்து ஆவணப்படத்தில் சில காட்சிகள் இடம் பெற இருப்பதாகவும் இதற்காக அந்த படத்தில் இருந்து சில பாடல்கள் பயன்படுத்த சம்மதிக்க வேண்டும் என தனுஷிடம் கேட்டதாகவும், இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்த அவர் தற்போது அதனை பயன்படுத்தக்கூடாது என கூறியதாக நயன்தாரா தான் வெளியிட்டு இருந்த அறிக்கையில் புகார் கூறியிருக்கிறார்.
மேலும் ஆவணப்படத்தில் தனது மொபைலில் எடுத்த மூன்று வினாடி காட்சியை பதிவிட்டதற்கு 10 கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், பொதுவெளியில் அன்பை பரப்புவோம் என பேசும் தனுஷ் தற்போது இப்படி நடந்து கொண்டிருப்பது அவரது உண்மையான முகத்தை காட்டுகிறது என கடுமையாக விமர்சித்து இருந்தார். இதை அடுத்து தனுஷின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நயன்தாராவுக்கு பல நடிகைகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தனுசுடன் நடித்த அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா உள்ளிட்ட நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த காலங்களில் நட்பாக இருந்த தனுஷ் நயன்தாரா இடையே பிரச்சனை வர என்ன காரணம் என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. அதாவது சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அப்போது அவர் மிகவும் பிசியான நடிகை ஆனாலும் தனுஷ் உடனான நட்பு காரணமாக பணமே வாங்கிக் கொடுக்காமல் நடித்ததாக தனுஷே குறிப்பிட்டு இருந்தார்.
அந்த அளவுக்கு நட்பாக இருந்த இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் இருந்தே பிரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அந்த படத்தில் இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதல் வயப்பட்ட நிலையில் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறவில்லை என தனுஷ் கேள்விப்பட்டிருக்கிறார். மேலும் இருவரும் அடிக்கடி பேசிய நிலையில் படப் பிடிப்பு ஒழுங்காக நடக்கவில்லை, இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தனுஷ் கூறியதாகவும், அதனை தானே சரி செய்து விடுவதாக நயன்தாரா கூறியதாகவும் அப்போது பேசப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் ஒருமுறை நயன்தாராவை சந்திக்க தனுஷ் சென்றதாகவும் அப்போது விக்னேஷ் சிவனுடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு வாருங்கள் என திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்போதிலிருந்து தனுஷ் - நயன்தாரா இடையே நிரந்தர விரிசல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே தனது படத்தில் பயன்படுத்திய காட்சிகளை நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என தனுஷ் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications