காளஹஸ்தி..திருப்பதி..குலதெய்வகோவில்..விக்னேஷ் சிவனை கரம்பிடிக்க வேண்டுதல் வைக்கும் நயன்தாரா

விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வேண்டுதல் வைத்து வருகிறார் நயன்தாரா. குலதெய்வ தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்யப்போகிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். திருமணம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக காளஹஸ்தி, திருப்பதியில் சிறப்பு வழிபாடு செய்த நிலையில் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டுள்ளார்.

Recommended Video

    Nayanthara ❤️ Vignesh Shivan Temple Visit | Nayanthara Marriage | Oneindia Tamil

    நயன்தாரா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து கோயில்களுக்கு சென்று வருகிறார். இந்து வழக்கப்படி விரதமிருக்கிறார். இந்து கடவுள்களை வணங்குகிறார். அதேபோல் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு எனவேதான் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்.

    நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் 2020ஆம் ஆண்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் காரணத்தால் திருமணம் தள்ளிப்போனது. தடை மேல் தடையாக வரவே ஆன்மிக சுற்றுப்பயணம் கிளம்பினர்.

    காளஹஸ்தியில் வழிபாடு

    காளஹஸ்தியில் வழிபாடு

    நயன்தாராவின் ஆஸ்தான ஜோதிடரை பார்த்த போது திருமண தோஷம் இருப்பதாக கூறி காளஹஸ்தி சென்று வழிபட வேண்டும் என்று சொல்லவே விக்னேஷ் சிவனோடு அங்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தார். அடுத்து பகவதி அம்மன், திருச்செந்தூர் என ஆன்மிக பயணம் சென்று வந்தனர்.

     ராகு பரிகாரத்தலம்

    ராகு பரிகாரத்தலம்

    கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் சென்று வரச் சொன்னார். ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டிப் பிரார்த்திக்கும் திருநாகேஸ்வரம் கோயிலுக்குப் போய் வந்ததும் திருமணத்தடை முற்றிலும் விலகிடும். அங்கு சென்று வந்தபிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறியிருக்கிறார் அந்த ஜோதிடர். ஆனால் அங்கு கிளம்புவதற்குள் கொரோனா வந்து ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது. ஒருவழியாக கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து தரிசனம் செய்து விட்டு வந்தார்.

     திருப்பதியில் தரிசனம்

    திருப்பதியில் தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இருவரும் வேண்டுதல் வைத்து விட்டு வந்தனர். கடந்த மாதம் இருவரும் திருப்பதி சென்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வந்ததாக தகவல் வெளியானது. ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஸ்ரீரங்கம், கும்பகோணம் கோவில்களில் தரிசனம் செய்த நயன்தாரா, விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலுக்கு போய் வழிபட்டு வந்துள்ளார்.

    குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா

    குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்த நயன்தாரா

    விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, நண்பகல் கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோயிலான, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்தும் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். நடிகை நயன்தாரா இந்த ஆலயத்திற்கு வந்திருக்கும் தகவல் பரவியதும் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் குவிந்தனர்.

     யானையிடம் ஆசி பெற்ற நயன்தாரா

    யானையிடம் ஆசி பெற்ற நயன்தாரா

    கும்பகோணத்தில் உள்ள சிவஆலயங்களில் முதன்மையான கோயிலாக விளங்கும் கும்பகோணம் மங்கலாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதலில் விநாயகர் சன்னதி, பிறகு ஆதிகும்பேஸ்வரர் சன்னதி தொடர்ந்து மங்கலாம்பிகை சன்னதியிலும் அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவாக, திருக்கோயிலில் இருந்து புறப்படும் முன்னர், கோயில் யானை மங்கலத்திற்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசிப்பெற்றனர். விக்னேஷ் சிவனை கரம் பிடிப்பதற்காக கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் வைத்து வருகிறார் நயன்தாரா. இவர்களின் திருமணம் தடையின்றி நடைபெற வேண்டும் என்று அவரது ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+