இந்த மனசுதான் சார் கடவுள்.. ஆதரவற்ற 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து கொடுத்த நயன்தாரா-விக்னேஷ்!
விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இ
சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Recommended Video
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என கூறியுள்ளனர்.

கெடுபிடி அதிகம்
திருமணம் நடைபெறும் விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும் மீடியாக்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர். கடற்கரைக்கு சென்றவர்களைக் கூட விரட்டியடித்த சம்பவங்களும் நடைபெற்றன.
எந்த ஒரு புகைப்படமோ அல்லது திருமண காட்சிகளோ வெளியாகிவிடக்கூடாது என்பதில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினர் உறுதியாக உள்ளனர்.

கண்ணாடி மாளிகையில் கல்யாணம்
திருமணத்துக்காக பிரமாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்திருந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நயன்தாரவிற்கு தாலிகட்டியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

வாழ்த்திய பிரபலங்கள்
இன்று நடந்த திருமணவிழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.

கல்யாண விருந்து
நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பல ஆண்டு கால காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. திருமணத்தை முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளிக்கின்றனர். சைவம் அசைவம் என இரண்டு வகையான உணவுகளும் வழங்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications