நீட் தேர்வு எப்படி இருந்தது? பேப்பர்லாம் ஈஸிதான்! ஆனால் எங்களை டிஸ்டர்ப் செய்தாங்க.. மாணவர்கள் வேதனை
சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடந்துள்ள நிலையில் வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நீட் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. என்சிஇஆர்டி எனப்படும் சிபிஎஸ்இ பாடப்பிரிவை நன்றாக படித்திருந்தால் நன்றாகவே மதிப்பெண் பெறலாம். இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது. மற்றபடி வேதியியல், தாவரவியல் கேள்வித்தாள் எல்லாம் எளிதாக இருந்தது.

தேர்வு தாள் ஓகேதான். ஆனால் தேர்வு நேரத்தில் எங்கள் நேரத்தையும் எடுத்துக்குறாங்க. எங்களை ஃபார்மாலிட்டீஸ் என்ற பெயரில் தொந்தரவு செய்கிறார்கள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. அடிக்கடி கையெழுத்து போட அழைக்கிறார்கள், கை ரேகையும் வைக்கவும் சொல்கிறார்கள்.
விடைத்தாளை வாங்கி சோதனை செய்து கொண்டே இருந்தனர். இதற்கென நேரம் ஒதுக்கி செக் செய்தால் கூட பரவாயில்லை. முந்தைய கேள்வித்தாள்களில் இருந்து சில வினாக்கள் வந்தன. NCERT புத்தகங்களை நன்றாக படித்தால் நன்றாக எழுதலாம். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வை என்டிஏ எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி 2024- 2025 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ் , ஆங்கிலம், இந்தி உள்பட 13 பிராந்திய மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் நேற்று நடந்தது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இந்த தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. மாலை 5.20 மணிக்குத்தான் முடிந்தது. தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் பேர் என நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்கப்படும். இதில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் குறைக்கப்படும். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications