நீட் தேர்வு.. அடம் பிடித்த மத்திய பாஜக அரசே 'கொள்ளி வைக்கிறது'? அனிதாக்களின் மரண ஓலங்கள் ஓயட்டும்!
சென்னை: மருத்துவ படிப்புக்கு நீட் எனும் அகில இந்திய அளவிலான பொதுத் தேர்வு முறை கட்டாயம் தேவை என வலிந்து திணித்த மத்திய பாஜக அரசு இப்போது அதே நீட் தேர்வு முறையை ஒழித்துக் கட்டும் கொள்ளிக் கட்டையை கையில் எடுத்திருக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பாட முறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பாட முறைகளில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து கொண்டிருந்தது காலங் காலமாக இருந்து வரும் நடைமுறை.

நீட் திணிப்பு: இதனால் மருத்துவ துறைகளில் 'ஏகபோகம்' தங்களுக்குதான் என அடம்பிடித்த ஒரு கூட்டம் மிரண்டு போனது.. கிராமத்து குப்பனும் சுப்பனும் நன்கு படித்து மருத்துவராக அதுவும் ஆகச் சிறந்த மருத்துவராக கொடி கட்டிப் பறப்பதை கண்டு அந்த கூட்டம் அரண்டும் போனது. இந்த கிராமத்து சுப்பாத்தாள் மகனும் சூரையன் மகனும் மருத்துவம் படிக்காமல் தடுக்க கொண்டுவரப்பட்ட கொடூர சூழ்ச்சிதான் நீட் தேர்வு முறை.
நீட் தேர்வு முறை: மாநிலங்களின் பாடத் திட்டத்தில் எத்தனை அற்புதமான மதிப்பெண் எடுத்தாலும் சரி.. சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிற நீட் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவ படிப்பு என பாழாய்ப் போன ஒரு நடைமுறையைத் திணித்தார்கள். இதற்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. தமிழ்நாடும் நீட் தேர்வில் இருந்து சிறிது காலம் விலக்கு பெற்றிருந்தது.
அனிதாக்களின் மரணங்கள்: ஆனால் ஏழை சொல் எங்கே அம்பலம் ஏறப் போகிறது? அநீதியாளர்கள், அநீதி செய்வது என முடிவெடுத்த பின்னர் அனிதாக்கள் நீதிமன்றப் படிகளேறிப் பார்த்தனர். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. தங்களுக்கு நேர்ந்த பேரவலத்துக்கு முட்டி மோதி அழுது கொண்டிருக்காமல் தூக்கு மாட்டி ஒரேயடியாக மூச்சை நிறுத்துக் கொண்ட அனிதாக்கள் பட்டியல் குரோம்பேட்டை ஜெகதீஷ் வரை.. எத்தனை எத்தனை போராட்டங்கள்.. எதற்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு காது கொடுக்கவில்லை.. சட்டாம்பிள்ளைத்தனமாக அனிதாக்களுக்கு கொள்ளி கட்டைகொடுப்பதிலேயே குறியாகத்தான் இருந்தனர்.
கிடப்பில் மசோதா: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்பக் கூட மனமற்றவர்களை தமிழ்நாட்டின் சரித்திரம் பார்த்து கொண்டிருந்தது. டெல்லியும் ஒப்புதல் தராமல் கோப்புக்குள் புதைத்து வைத்திருப்பதையும் பார்த்து கொண்டிருக்கிறது.
ஜீரோ பெர்சன்டைல்: இந்நிலையில்தான் நீட் முதுகலை படிப்பில் ஜீரோ பெர்சன்டைல் என்கிற ஒரு முறையை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நீட் தேர்வு அட்டண்ட் செய்தாலே போதும் என்கிற இந்த கொடூர முறையைத்தான் நீட் தேர்வை வலிய வலிய ஆதரித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர், ஒட்டுமொத்த நீட் தேர்வுக்கும் சாவு மணி அடிக்கப் போகிறீர்கள் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியனன், நீட் தேர்வில் இருந்து நாம் விலக்கு பெற சட்டப்பூர்வமான உதவியை மத்திய பாஜக அரசு செய்துவிட்டது என்கிறார்.
ஓயட்டும் ஓலம்: எப்படியோ! நீட் எனும் கொடூர தேர்வு முறை ஒழிந்து போகட்டும்! அதுவும் கொள்ளி கட்டை எடுத்து நமக்கு கொள்ளி வைக்க காத்திருந்தவர்களே வேறுவழியே இல்லாமல் நீட் தேர்வுக்கு கொள்ளி வைப்பது என்பது சாலச் சிறந்தது. ஆம் அனிதாக்களின் மரண ஓலங்கள் இனியேனும் ஓயட்டும் என வரவேற்போம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications