நெல்லை கவின் தந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல்.. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
தூத்துக்குடி: மாற்று சமூகத்துப் பெண்ணை காதலித்த காரணத்தால் நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் தந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் என்பவர் சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவர் சுபாஷினியும் காதலித்து வந்தனர்.

கவின் மற்றும் சுபாஷினி இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கவினை சந்திக்க வேண்டும் என்று அழைத்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், திடீரென அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதன்பின் சுர்ஜித் நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரி மற்றும் தந்தை சரவணன் ஆகியோரின் பெயர்களை எஃப்ஐஆரில் சேர்த்தனர். இவர்கள் இருவரும் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. இதன்பின் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. பின் சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தொடர்ந்து சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவரும் கைது செய்யும் வரை கவின் உடலை வாங்க மாட்டேன் என்று குடும்பத்தினர் போராடி வந்தனர். இதனையடுத்து சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். தாய் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கவினின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இதன்பின் கவின் உடலைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த குடும்பத்தினர், பின்னர் 6வது நாளில் உடலைப் பெற்று இறுதிச்சடங்கு மேற்கொண்டனர். இதையடுத்து கவினின் ஆணவக் கொலையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிக மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதேபோல் ஆணவக் கொலைக்கு எதிராகச் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த நிலையில் கவினின் தந்த சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கவினின் குடும்பத்தினருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவர் தமிழ்வாணனின் கோரிக்கையை ஏற்று, இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications