வாயை விட்ட மாயா அம்மா.. பூக்கார பாட்டி கன்னத்தை கிள்ளியது குத்தமா? வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
சென்னை: குழந்தையின் கன்னத்தை பூ விற்கும் மூதாட்டிய கிள்ளியதை விமர்சித்து வீடியோ வெளியிட்ட யூடியூபரை நெட்டிசன்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மாயா அம்மா என்ற பெயரில் யூடியூபில் குழந்தை வளர்ப்பு, மனநலம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வரும் பெண் சமீபத்தில் தனது குழந்தையுடன் வெளியிட்ட வீடியோவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் பேசியதாவது, "மல்லிகை பூ வாங்க சென்றோம். அங்கு வயதான மூதாட்டியிடம் பூ வாங்கிவிட்டு பர்சில் பணம் எடுக்கும் நேரத்தில் எனது மகளின் கன்னத்தை கிள்ளிவிட்டார்.

பணம் எடுத்து கொடுக்கும்போது நான் அதை பார்க்கவில்லை. அங்கிருந்து காரை எடுத்து கிளம்பியவுடன் இதுபற்றி பேசினோம். முந்தைய தலைமுறை உடல் எல்லைகளை புரிந்துகொள்ளாமல் உள்ளது. அவர்கள் வேண்டுமென்றே துன்புறுத்தவில்லை. நமது உடம்பு நம்முடையது.
அவர்களை தள்ளிப்போக சொல்ல எல்லா உரிமையும் உள்ளது. ஆனால், அந்த நேரத்தில் எங்களால் எதுவுமே சொல்ல முடியவில்லை." என்றார். அவர் அருகே இருந்த அவரின் பெண் குழந்தை, "அம்மா, ஏன் பெரியவர்களிடம் இதுபோல் நடந்துகொள்கிறார்கள்?" என்று கேட்க எனக்கு தெரியாது என்று அவர் சொல்கிறார்.
உடனே அந்த குழந்தை, "குழந்தைகள் சிறிதாக, அழகாக இருப்பதால் இவ்வாறு செய்திருக்கலாம்." என்றார். உடனே அந்த அம்மாவும், "குழந்தைகள் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதாலும், மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் செய்யலாம். உடல் வரம்புகள் தொடர்பாக தொடர்ந்து பேசுவோம். இது தொடர்பாக ஒரு வொர்க்ஷாப் நடத்துகிறேன். கீழே விபரம் உள்ளது." என்று தெரிவித்து இருக்கிறார்.

நமது ஊர்களில் வயதானவர்கள், பாசமாக குழந்தைகளின் கன்னங்களை கிள்ளி கொஞ்சுவது வழக்கம். இதில் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் இவர் வீடியோ வெளியிடுவது நவீன தீண்டாமைபோல் இருப்பதாக பலர் விமர்சித்து வருகிறார்கள். ட்விட்டரில் அவரது வீடியோவுக்கு கீழே பலர் கருத்திட்டு உள்ளனர்.
"ஒரு வயதான பெண் ஒரு குழந்தையின் கன்னத்தை கிள்ளி விட்டார் என்பதற்காக என் உடல், என் உரிமை, ஏன் இவ்வளவு தாமதம் என பெயர் வைத்து சோசியல் மீடியாக்களில் வீடியோ பரப்புவது நவீன தீண்டாமையின் நாகரிக மொழி" என்று விமர்சித்து இருக்கிறார்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், "வீடியோவின் இறுதியில், உடல் எல்லை வொர்க்ஷாப் என்று ஒரு டுவிஸ்ட் வெச்சாங்க பாருங்க.. எனக்கு தோன்றியது என்றால் பூ விக்குற பாட்டி கதை ஒரு போலி." என்று விமர்சிக்க, "மற்றொருவர் நானும் அதை கவனித்தேன். வியாபாரத்துக்காக போட்ட வீடியோ என்று நினைக்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மற்றொருவர் கருத்திட்டுள்ளதாவது, "இடுப்பு வலிக்க பூ கட்டி ஒரு 100 ரூபாயை சம்பாதிக்கிற அந்த பாட்டிக்கு அந்த பிள்ளையை கொஞ்சினா ஏதோ ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும், அதை எதோ பெரிய குற்றம் மாதிரி இப்படி ஊருக்குள்ள சொல்லிட்டு தெரியுறீங்க. எலைட் கிளாஸ் வாழக்கை முறையே வேறு தான்." என்று விமர்சித்துள்ளார்.
"அவர்கள் ஏழை என்பதால் வரும் திமிர் பேச்சு பள்ளியில், மருத்துவமனையில், விஷேச நிகழ்வுகளில் குழந்தைகளை தூக்கி கொஞ்ச முடியாத இடத்தில், இந்த முறைதான் இன்றளவும் உள்ளது. அதில் தவறேதும் இல்லை. அவர்கள் கைகளால் கட்டிய பூவுக்கு மரியாதை. ஆனால் அந்த பூக்களை கட்டிய கைகள் தீண்டத்தகாததா?" என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒருவர் "இந்தம்மா கருத்து எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா சொன்ன உதாரணம்தான் கேவலமா இருக்கு இதையே அந்த குழந்தை சொல்லிருந்தா ஓகே. இப்டி எல்லாத்தையுமே சந்தேகப்பட சொல்லி கொடுக்குறது தான் வளர்ப்பா? நாளைக்கு பாக்குற ஆளையெல்லாம் அந்த குழந்தை சந்தேகத்தோட பாக்கும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Mom influencer being offended for a random பூ விக்குற பாட்டி pinched her daughter's cheek pic.twitter.com/f7Y6yEjAqV
— Ra Ku (@ra_ku2020) July 25, 2023
"உடல் எல்லை எல்லாம் சரி தான். இதுவே ஒரு பிரபலம் குழந்தையோட கன்னத்தைச் செல்லமா கிள்ளி இருந்தா, ஏதாவது யூடியூப் இன்டர்வியூல போய் அவர் என் கன்னத்தை கிள்ளினாரு எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு.. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் என்று சொல்லி இருப்பாங்க." என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு ட்விட்டர் பயனர், "பணக்காரங்களுக்குதான் வாழ்க்கைல எவ்ளோ பிரச்சனைகள் தினுசு தினுசா வருது. இந்த எலிட் காட்டும் வோக்கிசம் ஏன் பெரும்பாலும் நகரங்களில் வர்க்கரீதியா தனக்கு கீழ வாழ்ற மக்கள் கிட்டயே இவங்களுக்கு வருதுன்ற கேள்வி எழும். தீண்டாமைக்கு ஆசாரம்னு வோக்னு பேர் வச்சுருக்கானுகபோல." என்று விமர்சித்து இருக்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications