• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அத்திவரதர் vs சித்திரை திருவிழா... சமூக வலைதளத்தில் உக்கிர கருத்து யுத்தம்!

|
  Athivaradhar | குளம் வேண்டாம்.. கோயிலே போதும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் - வீடியோ

  சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவை முன்வைத்து சமூக வலைதலங்களில் பெரும் விவாத யுத்தமே நடைபெற்று வருகிறது.

  மதுரையை சேர்ந்த குமுதா மகாராஜன் என்பவர் காஞ்சிபுரத்து அத்திவரதரை தரிசிக்க சென்று அவஸ்தைப்பட்டதாகவும் சித்திரை திருவிழாவின் பெருமைகளை பட்டியலிட்டும் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

  Netizens Fight on Athivarathar and Madurai Chithirai festival

  இதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

  அன்புள்ள, மதுரை, குமுதா மகராஜனுக்கு.. நீங்க யாரு பெத்த அம்மணியோ, காஞ்சி வந்து அத்திவரதரால் நொந்துபோய் வடித்த தங்களின் கண்ணீர் மடலை படித்தேன்.

  மதுரையின் சிறப்பை சொன்னீர்கள். வாஸ்தவம்தான்.. கள்ளழகர் போன்ற விழாக்க ளின் போது ஊருக்கு வந்தால் விருந்தினரை உபசரிப்பதில் மதுர பாசக்கார பயலுகளை அடிச்சிக்கவே முடியாது என்கிறீர்கள்..நாங்கள் மட்டும் என்ன எங்கள் ஊரில் வருடந்தோறும் கருடசேவைக்கும் பங்குனி உத்திர திருவிழாவுக்கும் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கா மல் கம்பத்தில் கட்டி வைத்தா அடிக்கிறோம்.?

  விழுந்து விழுந்துதான் கவனிப்போம். ஒரு கோவிலில் திருவிழாவை காண வந்தவர்களை மற்ற கோவில்க ளுக்கும் கூட்டிகிட்டு போய் காட்டுவோம். பொங்கல், புளியோதரைன்னு பிரசாதமும் வாங்கி தருவோம். இது தவிர லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்க்கு திரும்பிய திக்கெல்லாம் செம டேஸ்ட்டான அன்னதானத்தால் திணறடிப்போம்..

  கள்ளழகரும் கருடசேவையும் லட்சக்கணக்கானோர் கூடும் ஒரு நாள் விழா. நல்லா கேட்டுச்சா? ஒரே நாள் விழா. விருந்தினர்களை சமாளிச்சிடலாம். அதெல்லாம் வருஷத்துக்கு ஒரு நாள் இரண்டு நாள் என்பதால் டங்குவார் அறாது.. ஒருநாள் திருவிழா, லட்சக்கணக்கான பேரு. ஆனா அத்தி, 48 நாளுக்கும் தொடர்ந்து திருவிழா, தினமும் லட்சக்கணக்கான பேரு.. நல்லா கேட்டுச்சா?

  டெய்லி விருந்தினர்கள் டிசைன் டிசைனா வருவாங்க, ஒத்தையில வருவாங்க, ஜோடியா வருவாங்க, புள்ளை குட்டியோட வருவாங்க. ஏன் ஒட்டு மொத்தமா கிளம்பி வேன்லயும் பஸ்சுலயும் வருவாங்க.. வெளியே பார்த்து ஓட்டல்ல வெச்சி பேசி அனுப்ப வேண்டியது, வீட்ல வெச்சி கவனிக்கவேண்டியது.. பஸ்ல வந்தா ஒரு சத்திரத்தையே பிடிச்சி குடுத்து பல உதவிகளை செய்யவேண்டியது... நாக்கு தள்ளும் மேடம்..

  ஒரு கோஷ்டி எமன் கோவில் உங்கூர்ல இருக் காமே, காட்டமுடியுமான்னு கேக்கும். இன்னொரு கோஷ்டி, பட்டுப்புடவை கடையை கேக்கும். இன்னும் சிலது பட்டுத்தறி நெய்யறதை காட்டுங்களேன்னும்.. ஒரு நாள் செய்யலாம், ரெண்டு நாள் செய்யலாம், ஒன்றரை மாசம் தொடர்ந்து செஞ்சி பாருங்க. அப்பத் தெரியும் காஞ்சிவரத்தானுங்க கஷ்டம். அத்திவரதரை உள்ளே வெச்ச மூடுறதுக்கு முன்னால அங்கே போய் நாங்க படுத்துப்போம்போல..

  அத்திவரதர், படுத்த கோலத்துலயே எங்களை இவ்ளோ தூரத்துக்கு கதறவிடறாருன்னா..இன்னும் நிக்கற கோலம் பாதி இன்னிங்ஸ் இருக்கு..செத்தான்டா சேகர்ன்ற மொமெண்ட்ல இருக்கோம்.. அப்புறம் முக்கியமான விஷயம் சொல்லமறந்துட் டோம். அத்திவரதர் பாஸ் மேட்டர்.. வேணாம் மேடம்.. தெரிஞ்சவங்கள்ல 100க்கு 98 பேர் விரோதியாயிட் டான்..

  சிறப்பு தரிசனம் காட்லேன்னு மனசுக்குள் ளேயே கடுப்பா இருக்கிற மாமன் மச்சான் பங்காளிங்க, எந்த நல்லது கெட்டதுல எப்போ என்ன மாதிரி வெச்சி செய்யப்போ றாங்களோன்னு இப்பவே பீதியா இருக்கு. ஏன் மேடம் நீங்க ஏன் கள்ளழகரை 40 வருஷத்துக் கொரு தடவை மட்டும் வைகை ஆத்துல எறக்கி 48 நாளுக்கு தொடர்ந்தாப்ல அங்கயே நிறுத்தி வெச்சிகிட்டு உங்க பாசக்கார பயலுங்க பெருமையை அகில உலகத்துக்கே பறைசாற்றக்கூடாது ?

  இப்படிக்கு ஏற்கனவே கதறலுக்கு ஆளாகி இப்போது உங்களால் மேலும் கடுப்பாகியிருக்கும் காஞ்சிவரத்தான்.. என பதிவிட்டுள்ளார்.

  அதெல்லாம் சரிதான்...மதுரையின் வருடாந்திர சித்திரை திருவிழா கூட்டத்தையும் அத்திவரதரின் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் கூட்டத்தையும் கூட்டினா சரியாகத்தான் போய்விடும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Intresting arguments are going in Facebook on the Athivarathar and Madurai Chithirai festival.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more