திராவிடம் Vs ஜெய்ஶ்ரீராம்: சென்னையில் ஜெயித்த பாகிஸ்தான்- கருணாநிதி தந்த கோப்பை- பதிலடி வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஜராத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எதிராக ஜெய்ஶ்ரீராம் கோஷங்கள் எழுப்பிய சர்ச்சைக்கு பதிலடியாக சென்னையில் முன்னர் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் ஜெயித்த போது தமிழ்நாட்டு ரசிகர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

 Netizens Share India- Pakistan Chennai match video against Jai-Shree Ram Chants controversy

இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக ஜெய் ஶ்ரீராம் எனும் இந்துத்துவா முழக்கத்தை இடைவிடாமல் எழுப்பினர். குறிப்பாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது அவரை வெறுப்பேற்றும் வகையில் ஜெய்ஶ்ரீராம் என இந்திய ரசிகர்கள் முழக்கம் எழுப்பிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

விளையாட்டுப் போட்டிகளில் இப்படியான மத அடிப்படையிலான முழக்கங்கள் எழுப்புவதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், விளையாட்டு சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். இந்திய ரசிகர்களின் இந்த அணுகுமுறை ஏற்க முடியாதது. விளையாட்டை வெறுப்பை வளர்க்கும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார். இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

 Netizens Share India- Pakistan Chennai match video against Jai-Shree Ram Chants controversy

பெரியார் சாதித்தது: இதனிடையே சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களின் 'ஜெய்ஶ்ரீராம்' கோஷத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. @jaya2016maha என்ற பதிவர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்த போதும், ஒருபக்கம் தோல்வியடைந்த கவலை இருந்தாலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்களை பாராட்டும் 'தமிழ் மக்கள்' திராவிடம் எங்களுக்கு கல்வியறிவை கொடுத்தது அதனால் நாகரிகமான சமூகமாக மாறினோம். இதுதான் பெரியார் சாதித்தது என பதிவிட்டுள்ளார்.

 Netizens Share India- Pakistan Chennai match video against Jai-Shree Ram Chants controversy

கருணாநிதி பரிசளிப்பு: @Kaka_offic என்ற பதிவர், உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் வாழும் இடம் " தமிழ்நாடு ". மனிதர்களாக எங்களை மாற்றிய எங்கள் ஆசான் சமத்துவ நாயகன் "கலைஞர் கருணாநிதி" தலைமையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பரிசளிப்பு விழாவின் போது... என வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

 Netizens Share India- Pakistan Chennai match video against Jai-Shree Ram Chants controversy

நாகரிகம் தோற்றது: கவிஞர் சல்மா தமது எக்ஸ் பக்கத்தில், நேற்று விளையாட்டில் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால் மனிதம் நாகரிகம் , இறையாண்மை இவற்றில் நம் நாடு தோற்று விட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை வரவேற்க வேண்டும்: @Vanitha06119914 என்ற பதிவர், அந்த ராமனே வெட்கப்படுவாருடா உங்கள எல்லாம் பாத்து- குஜராத், நரேந்திர மோடி மைதானத்தில் வெறுப்புணர்வு விஷத்தை பரப்பிய மதவெறி மிருகங்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் விளையாட வரும் பாகிஸ்தான் வீரர்களை இன்முகத்தோடு வரவேற்று அன்பை பரிசளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+