சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிணத்தை காணோம்ங்க.."மதுரை எய்ம்ஸ்! நட்டா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறிய கருத்துகள் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அமையும் என அறிவித்தது.

அதைத் தொடர்ந்து 2019இல் மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்புபட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு

 மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சாலை மற்றும் சுற்றுச்சுவரைத் தவிர வேறு எந்தவொரு கட்டுமான பணிகளும் இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் ஒவ்வொரு முறையும் இப்போது முடிந்துவிடும் அப்போது வந்துவிடும் என அரசியல்வாதிகள் கூறுவது அப்பகுதி மக்களுக்குக் கடுப்பாக்கி வருகிறது. இந்தச் சூழலில் தான், இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வந்துள்ள பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

 ஜேபி நட்டா

ஜேபி நட்டா

மதுரையில் பல துறை வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கா முதற்கட்டமாக ரூ. 1264 கோடி ஒதுக்கப்பட்டது. எய்ம்ஸ் எங்கு அமைக்கலாம் என்று சிக்கல் எழுந்த நிலையில், மதுரையில் கட்ட முடிவு செய்தோம். அதற்கான தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% பணிகள் விரைவில் முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

 சு வெங்கடேசன்

சு வெங்கடேசன்

இது இணையத்தில் பெரும் விவாதமாக்கியது. பலரும் எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து இணையத்தில் கருத்துப்பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக மதுரை எம்பி வெங்டேசன், "புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையைக் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கடிதத்தைத் தேடி நானும் மணிக்கம் தாகூர் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்" என்று பதிவிட்டுள்ளார்.

 கிணத்தோ காணோம்

கிணத்தோ காணோம்

அதேபோல மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நக்கலாக தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வடிவேலு நடித்திருந்த படம் ஒன்றில் அவர் கிணத்தை காணோம் என்று போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து இருப்பார். இதை அத்துடன் ஒப்பிட்டு 95% பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணவில்லை எனக் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்..

 கவுண்டமணி

கவுண்டமணி

இன்னும் சிலர் பிரபு கவுண்டமணி நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் பிரபுவை வீட்டிற்கு கவுண்டமணி அழைத்துச் செல்வார். வீட்டின் முகப்பு மட்டும் பக்காவாக இருக்கும். ஆனால் உள்ளே எதுவும் இருக்காது. இது தான் புதிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எனப் பகிர்ந்து வருகின்றனர்.

 கூகுள் மேப்

கூகுள் மேப்

இன்னும் சிலர் வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், சிலர் கூகுள் மேபில் மதுரை எய்ம்ஸை தேடி 95% இல்லை வெறும் 5% கட்டிட பணிகள் கூட நடக்கவில்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.

 வடிவேலு

வடிவேலு


மேலும், சிலர் வடிவேலுவின் பிரபல மீம் ஒன்றையும் பகிர்ந்து வருகின்றனர். அதில் "ஒரே ஒரு செங்கல் தான் நட்டாங்க.. 95% பணிகள் குளோஸ்" என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 உதயநிதி

உதயநிதி

கடந்த 2021 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஒற்றை செங்கல்லை வைத்து பிரசாரம் செய்து இருந்தார். அது பெரியளவில் மக்களிடையே ரீச் ஆனது. அந்த ஒற்றை செங்கல் கூட இன்னும் கட்டுமான பணியிடத்திற்கு வரவில்லை என்று திமுகவினர் பலரும் நக்கலாக பதிவிட்டு வருகின்றனர்.

English summary
BJP Chief Nadda says 95% of Madurai AIIMS construction completed: Internet reacts for BJP Chief Nadda's comment on Madurai AIIMS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X