கார் மூடி வைக்கிற கவரை பார்த்திருப்பீங்க.. காரையே கவரா பயன்படுத்துறத பார்த்திருக்கீங்களா? பாருங்க
சென்னை: காரை மூடி வைக்கிற கவரை பார்த்திருப்பீர்கள்.. ஆனால் காரை பத்திரப்படுத்த காரையே கவராக பயன்படுத்துவதை பார்த்திருக்கிறீர்களா? புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்.
கார்கள் தொடர்பாக புதிய தொழில் நுட்பங்கள் உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக உருவாகி வருகின்றன. கார்கள் என்பது பயணிக்க பயன்படும் வாகனம் என்பதை தாண்டி, அதில் ஏராளமான வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு சொகுசு வீட்டில் உள்ளதற்கு நிகரான பல்வேறு வசதிகள் கார்களில் வந்துவிட்டன. கார்களில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள் கணிணி மயமாகியே பல வருடங்கள் ஆகிவிட்டது. அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில் நுட்பத்தில் கார்கள் வேலை செய்ய தொடங்கி உள்ளன.

கார்கள் விபத்தில் சிக்காத அளவிற்கு தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவேளை மிகப்பெரிய விபத்தில் சிக்கினாலும் காரில் செல்பவர்கள் எந்த ஆபத்திலும் சிக்காமல் சிறிய காயத்துடன் தப்பிக்கும் அளவிற்கு ஏஐ தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.
அதேநேரம் விபத்தில் சிக்கும் வாகனங்கள் எந்த நிலையிலும் உடையாத அளவிற்கும், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் தரும் வகையில் தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிசிடிவி கேமராக்கள், காரில் சென்சார், அற்புதமான இருக்கைகள், அசத்தலான லுக் தரும் வடிவமைப்பு, மைலேஜ், சொகுசு வசதிகள், இரவை பகலாக்கும் வெளிச்சம் தரும் லைட்டுகள் என கார்கள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டிருக்கிறது.
*கார் மூடி வைக்கிற கவர பார்த்திருக்கேன்*
— Dr Ganesh Iyer MM (@GanKanchi) May 24, 2024
*ஆனா காரை பத்திர படுத்த காரையே கவரா பயன்படுத்துவதை இப்போது தான் பார்க்கிறேன்...New Technology... 😲🤭* pic.twitter.com/laV3FVpouD
அதேபோல் கார்கள் ஆளே இல்லாமல் தானாகவே செல்லும் வகையில் மாறி வருகின்றன. அதாவது டிரைவரே இல்லாமல் இயங்கக்கூடிய கார்கள் வெளிநாடுகளில் உருவாகிவிட்டன. டிரைவர் இல்லாத கால் டாக்ஸி சேவைகள் வெளிநாடுகளில் வந்துவிட்டன. நம்ம ஊரில் போக்குவரத்து விதிமீறல்கள் பிரச்சனைகள் அதிகம் இருப்பதால், இந்த வசதிகள் வருவது அவ்வளவு எளிதாக இருக்காது. அதேநேரம் வெளிநாட்டு கார்களுக்கு நிகராக பல்வேறு கார்கள் இந்தியாவிலும் உருவாகி வருகிறது.
இதனிடையே கார் டெக்னாலஜி தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கார் ஒன்று வருகிறது. அந்த கார் திடீரென முன்பக்கம் ஓபன் ஆகிறது. அதன்பிறகு இன்னொரு கார் அதில் உள்ளே போகிறது. பின்னர் காரின் எல்லா பக்கமும் ஒபன் ஆகி,, கார் ஒரு கவர் போல் மாறி, இன்னொரு காரை பாதுகாக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications