கிரீன் சிக்னல் காட்டிய ஸ்டாலின்.. ஆக்சனை ஆரம்பித்த ஐபிஎஸ்கள்.. அருண், தேவாசீர்வாதம் மிரள விடுறாங்களே
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ரீதியான புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் காவல் அதிகாரிகள் ஆக்சனில் இறங்கி உள்ளனர். ரவுடிகளுக்கு புரிகிற மொழியில் பேசுவேன் என்று சென்னை கமிஷனர் அருண் கூறிய நிலையில்தான் அடுத்தடுத்த ஆக்சன்கள் நடந்து வருகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி, கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்டார்.

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு செல்ல முயன்ற போது அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இன்னொரு என்கவுண்டர்; 4 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் ரவுடி துரை என்பவர் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி துரைசாமி என்கிற எம்ஜிஆர் நகர் துரை. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, உள்ளிட்ட 70 வழக்குகள் உள்ளன. இதில் 4 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிரடி ஆக்சன்: சென்னை கமிஷனராக பதவி ஏற்றுள்ள அருண் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறிய அருண்.. அதற்கான பணிகளில் இறங்கி உள்ளார். ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.
சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.
உத்தரவு மேல் உத்தரவு: சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.
தொடர் ஆக்சன்: இப்படி உள்ள நிலையில்தான் அதிகாரிகள் ஆக்சனில் குதித்து உள்ளனர். இது போக, பொதுமக்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள்
பொதுமக்களிடமும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களிடமும் மரியாதைக்குரிய வகையில் பேச வேண்டும். துயரத்துடன் புகாரளிக்க வரும் மக்கள் போலீசாரைப் பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுங்கள்.
புகார்தாரர்களிடம் கனிவாகப் பேசுவதோடு, 'மிஸ்டர்', 'மேடம்' உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அழைக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications