புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: புதிய கல்விக்கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழி வகைகள் இருக்கின்றது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'எண்ணித்துணிக' என்னும் நிகழ்ச்சி மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு தமிழக அரசியலில் விவாதப்பொருளாகும் வகையில் பல நேரங்களில் அமைந்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவி, தனது பேச்சிலும் அவ்வப்போது இதை பிரதிபலிக்கும் விதாக கருத்து கூறி வருகிறார்.

இதனால், ஆளும் திமுகவும் ஆளுநரின் பேச்சுக்கு பதிலடியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உலக மனநல நாளை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில் எண்ணித்துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனநல ஆரோக்கியம் சார்ந்த ஆளுமைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
ராஜ்பவனில் உள்ள பாரதி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தாய், தந்தைகள் குழந்தைகள் அருகில் இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் பிரித்து வைக்கின்றன. பெற்றோர் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் குழந்தைகளை சரியாக பார்ப்பது இல்லை. உங்கள் மனதை எப்படி கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதற்கு யோகா உதவும். இந்தந்த யோகா செய்தால் தான் சரி என்று இப்போது பல விளம்பரங்கள் எல்லாம் வருகிறது.
ஆனால் யோகா நமக்கு வலி ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பல வழி வகைகள் இருக்கின்றது. புதிய கல்விக் கொள்கை மன அழுத்தத்தை குறைக்கும். உங்களால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்யுங்கள், உங்களால் தான் எல்லாம் முடியும் நீங்கள் தான் எல்லாம் என்று எண்ணம் இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications