ரயிலில் இனி அன் ரிசர்வ்டு டிக்கெட் ஈஸி.. m-UTS உதவியாளர் மூலம் பெறலாம்! சென்னை சென்ட்ரலில் சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே நிர்வாகம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல சமயங்களில் சலுகைகளையும் அதிரடியாக அறிவித்து சர்ப்ரைஸ் தந்து வருகிறது.. அதேபோல ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், டிக்கெட் கவுண்ட்டர்களின் சுமையைக் குறைத்து, பயணிகளுக்கு விரைவான, வசதியான சேவையை வழங்க மற்றொரு புதிய முயற்சி சென்ட்ரல் நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரயில் சேவைகளின் தேவை அதிகரித்தபடியே உள்ளதால், முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் பல வருட காலமாகவே கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்..

Unreserved Tickets Chennai M-uts-assistants -

எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணியர்களின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.

முன்பதிவில்லாத பெட்டிகள்

அதன்படி, ரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் கொடுக்கப்படும். வழக்கமாக ஒரு முன்பதிவில்லாத ரயில் பெட்டியில் 70 முதல் 80 சீட்டுகள் இருக்கும். ஆனால் தற்போது புதிய கட்டுப்பாடு காரணமாக, பயணிகள் சிரமமின்றி பயணிக்க முடியும்,

இதன் சோதனை முயற்சியாக, டெல்லியில் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு 150 டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டது.. இந்த சோதனையின் வெற்றியை பொறுத்து இந்த திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் ரயில்வே தரப்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

எம்-யுடிஎஸ் உதவியாளர் யார்

இப்படிப்பட்ட சூழலில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மற்றொரு புதிய முயற்சி கொண்டுவரப்பட்டுள்ளது.. அதாவது உதவியாளர் துணையுடன், யுடிஎஸ் (M-uts) சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட்டை எடுத்து தருவதே இந்த திட்டத்தின் சாராம்சம் ஆகும்.

அதாவது உதவியாளர்களின் துணையுடன், கையடக்க செல்போன் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் சாதனத்தைப் பயன்படுத்தி உடனடியாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

"எம்-யுடிஎஸ் உதவியாளர்" (m-UTS Assistant) என்பவர் ரயில்வேயால் பணியமர்த்தப்பட்ட ஒரு தனிநபர் ஆவார். ரெயில்வே வழங்கிய கையடக்க எம்-யு.டி.எஸ். சாதனம் மற்றும் அச்சுப்பொறியைப் பயன்படுத்தி பயணிகளுக்கு டிக்கெட்டுகளை இவர்கள் எடுத்து தருவார்கள். எனினும், இந்த உதவியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையோ அல்லது சலுகை அடிப்படையிலான டிக்கெட்டுகளையோ பெற முடியாது.

என்னென்ன வசதிகள்

இந்த புதிய நடைமுறை காரணமாக, டிக்கெட் கவுண்ட்டர்களில் நெரிசல் குறையும்.. பயணிகளுக்கும் விரைவான, வசதியான டிக்கெட் எளிதில் கிடைத்துவிடும்.. அதேபோல ரிசர்வேஷன் செய்யப்படாத அன்ரிசர்வ் பயண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் போன்றவற்றையும் இவர்கள் மூலம் எளிதாக பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டம் நாட்டின் பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும்நிலையில், இப்போது சென்னை சென்ட்ரலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷன்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரயில்வே துறை, டிஜிட்டல் டிக்கெட் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த புதிய திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+