2024 பாஜக ரிட்டர்ன் வந்தால்.. நிதிஷ் முடிவால்.. இங்கே அதிமுகவிற்கு சிக்கல்.. வேறு வழியே இல்லையாமே!
சென்னை: தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் வலிமை அடைய தொடங்கி உள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வருவார் என்ற தகவல்கள் வருவதால் அதிமுகவிற்கு பிரஷர் அதிகரித்துள்ளது.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்தோம். கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு சிஏஏவை ஆதரித்தோம். வேறு வழியில்லாமல் சிஏஏவை ஆதரித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதேபோல் இஸ்லாமியர்களை கவரும் விதமாக பல விஷயங்களை அவர் பேசி வருகிறார். பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்பது போல பேசி வருகிறார்.
கூட்டணி முறிவு: பெரும் விவாதம், மோதலுக்கு பின்பே .. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது.
இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
பீகாரில் கூட்டணி: இந்த நிலையில்தான் தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் வலிமை அடைய தொடங்கி உள்ளது. இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அக்கட்சி முறிக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
இந்திய கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வெளியேறுவார். அதோடு பீகாரில் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவிற்கு பிரஷர்: பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு வருவார் என்ற தகவல்கள் வருவதால் அதிமுகவிற்கு பிரஷர் அதிகரித்துள்ளது. நிதிஷ் குமார் வருகையால்.. பாஜக கூட்டணி மீண்டும் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் அயோத்தி கோவில் திறப்பு விழாவால் பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போது பீகாரில் நிதிஷ் குமார் வருகையால் பாஜக கூட்டணி கூடுதல் வலிமை அடையும் வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில் அதிமுகவிற்கு பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான பிரஷர் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கிறது. அப்படி இருக்க அதிமுக தேசிய கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே லோக்சபா, சட்டசபை , உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. இந்த லோக்சபா தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் பட்சத்தில் அது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவாக இருக்கும். அந்த வகையில் தேசிய அளவில் வலிமையாக இருக்கும் பாஜக கூட்டணிக்கு அதிமுக திரும்புவதே அந்த கட்சிக்கு வலிமை சேர்க்கும்.
இது சட்டசபை தேர்தல் கிடையாது.. லோக்சபா தேர்தல் என்பதால் அதிமுக பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும். அப்படி இருக்க பாஜக கூட்டணிக்கு மீண்டும் அதிமுக திரும்புவதற்கான பிரஷர் ஏற்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications