புதிதாக ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா? வெளியான குட் நியூஸ்.. லிஸ்ட் ரெடி.. வீடு தேடி வருது
சென்னை: தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் இதுவரை 80,050 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குடும்பத்தினருக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு உள்ளது. தமிழகத்தில் அரசின் பல முக்கியமான சலுகைகளை பெற இந்த ரேஷன் அட்டையே பயன்படுகிறது. இருப்பிட சான்றாகவும் இந்த குடும்ப அட்டை பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் அட்டைகள் உள்ளன.

தமிழகத்தில் மிக முக்கியமான சலுகைகளை பெறவும் ரேஷனில் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கவும் ரேஷன் கார்டுகள் கட்டாயம். தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறவும் ரேஷன் கார்டு இன்றியமையாததாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.
இதனால், ஒரே குடும்பத்தில் வசித்து வந்தவர்கள் பலரும் தனி குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால், விண்ணப்பங்கள் திடீரென உயர்ந்தது. இதையடுத்து இந்த பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து, புயல் மற்றும் கனமழையல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது. அனால், லோக்சபா தேர்தல் காரணமாக மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தேர்தல் பணி முடிந்த பிறகு ரேஷன் கார்டுகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்கின. இதன்படி, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு வந்த 2,89,591 விண்ணப்பங்களில், 1,22,00 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் 80,050 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு விட்டது. விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், கிட்டத்தட்ட 1 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படன. மேலும் 68,291 விண்ணப்பங்களை சரிபார்க்கும் மற்றும் கள ஆய்வுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிதாக ரேஷன் கார்டு கிடைக்கப்பெற்றால், தகுதியான விண்ணப்பதார்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications