சென்னையில் புதிய வகையில் மோசடி.. லிங்கை தொட்டவுடன் ரூ. 20000 அவுட்.. போலீஸ் முக்கிய அலார்ட்
சென்னை : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பான் கார்டை இணைக்காவிட்டால் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகிறார்கள். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் உடனே 20000 வரை பணம் போகிறது. உடனே அக்கவுண்டை பிளாக் செய்யாவிட்டால் மொத்த பணமும் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே லிங்கை தொடாதீர்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் பெயரை பயன்படுத்தி பணத்தை திருடும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும், பான் கார்டை இணைக்க வேண்டும் என்று சொல்லி பணத்தை திருடுவது அதிகமாக உள்ளது.
அப்பாவி மக்களை குறிவைத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய மோசடிகள் நடந்து வருகிறது. மாதம் இவ்வளவு சம்பாதிக்கலாம், தினமும இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று வரும் மோசடியான லிங்குகளையும் ஒரு நாளும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்,

விளம்பரம்
பிளிப் கார்டில் 50000 போன் 5000 ரூபாய் உங்களுக்கு என்றே ஆபர் வந்துள்ளது. அமேசானில் ..பிளிப்கார்டில் உங்களுக்கு காத்திருக்கும் வேலை ஆர்டர், வேலையில் சேர தயாரா என்றெல்லாம் குறிவைத்து மோசடியான லிங்குகளை எம்எஸ்எஸ் மூலம் அனுப்புகிறார்கள். பல்க் எஸ்எம்எஸ் மூலம் பல ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் வரும் விளம்பரங்களை தொட்டால் உங்கள் கணக்கில் பணம் உடனே காலியாகிவிடும். அல்லது உங்களை மூளைச்சலவை செய்து சிறிது சிறிதாக பணத்தை பறிப்பார்கள்.

வாட்ஸ்அப்
இதேபோல் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பிரபல நிறுவனங்கள் பெயரில் தகவல் அனுப்புகிறார்கள். இதில், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடி நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் செல்போனில் டவுன்லோடு ஆகிறது. பிறகு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது டெலிகிராம் மூலமாகவோ மோசடி நபர்கள் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அறிவுரைகள் கொடுத்து குறிப்பிட்ட ஆப் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதற்கான வழிமுறைகளை சொல்லி கொடுக்கிறார்கள். அதிலும் பணத்தை பறிக்கிறார்கள்.

நல்ல செய்தி
உங்களுக்கு வங்கியில் தனிநபர் கடன் காத்திருக்கிறது. 48 மணிநேரத்தில் உங்கள் கணக்கில் பணம் வந்துவிடும். வட்டி வெறும் 10.25 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது என்று பிரபல வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அல்லது எஸ்பிஐ, ஹெச்எடிஎப்சி பெயரை உள்ளே குறிபிட்டு தவறான லிங்கை அனுப்புவார்கள். அதை கிளிக் செய்து உள்ளே போனால் உங்கள் தகவல் திருடப்பட்டு பணம் காலியாகிவிடும் ஜாக்கிரதை மக்களே. இதேபோல் 25000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர் என்றால் உங்களுக்கு தனிநபர் கடன் 20 லட்சம் வரை காத்திருக்கிறது. உங்களுக்கு நல்ல செய்தி என்று வரும் லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள்.

போலீசார் எச்சரிக்கை
இப்போது புதிதாக சென்னைக்கு வேகமாக பரவும் புதிய மோசடி என்னவென்றால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பான் கார்டை இணைக்காவிட்டால் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகிறார்கள். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் உடனே 20000 வரை பணம் போகிறது. உடனே அக்கவுண்டை பிளாக் செய்யாவிட்டால் மொத்த பணமும் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே லிங்கை தொடாதீர்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபோன்று இதுவரை இரண்டு கேஸ் ஒரு ஸ்டேசனுக்கு வந்துள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications