மருத்துவமனையில் யுபிஐயில் பணம் அனுப்ப போறீங்களா? திடீரென மாற்றப்பட்ட விதி.. இதை நோட் பண்ணுங்க!
சென்னை: மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.

இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
எங்கும் யுபிஐ: அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்குகூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்களும் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
மருத்துவமனை: இந்த நிலையில், மருத்துவமனை, கல்வி நிலையங்களில் UPI மூலம் அதிகபட்சமாக ₹5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. முன்னதாக ₹1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது 5 லட்சம் ரூபாய் வரை பணம் பரிவர்த்தனை செய்ய மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்முறை நீங்கள் ஒரு கணக்கிற்கு 2,000 ரூபாய் அனுப்புகிறீர்கள் என்றால்.. அதன்பின் மீண்டும் அவர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
என்னென்ன கட்டுப்பாடு: அதாவது நீங்கள் நேரடியாக ஒரு நபருக்கு 2000 ரூபாய்க்கு மேல் முதல் முறையாக அனுப்பிவிட முடியாது. அதே சமயம் இது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பிஸ்னஸ் கணக்குகளுக்கு பொருந்தாது . அதாவது கடைகளில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் அந்த 10 ஆயிரம் ரூபாய்க்கு அப்படியே யுபிஐ மூலமே பணம் செலுத்தலாம்.
ஆனால் அதுவே உங்களின் புதிய நண்பர் ஒருவர் உங்களிடம் 3000 கேட்டார் என்றால் முதலில் 2000 அனுப்ப முடியும். 4 மணி நேரம் கழித்தே மீதம் உள்ள தொகையை அனுப்ப முடியும். உங்கள் கணக்கில் இருந்து மோசடியாளர்கள் பணம் திருடுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications