சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரும் 23 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாற வாய்ப்பு.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் நேற்றைய தினம் குஜராத் அருகே பெருத்த காற்று மற்றும் கனத்த மழையுடன் கரையை கடந்தது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்தது.

இந்த புயலால் மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த நிலையில் இந்த புயல் நேற்று இரவு வலுவிழந்துவிட்டது.

டவ் தே புயல்: குஜராத்தில் சூறைக் காற்று, பேய் மழையுடன் கரையை கடந்த வீடியோ காட்சிகள்! டவ் தே புயல்: குஜராத்தில் சூறைக் காற்று, பேய் மழையுடன் கரையை கடந்த வீடியோ காட்சிகள்!

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

தற்போது வங்கக் கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடர்ந்த மேகக் கூட்டங்கள் காணப்படுகிறது.

புயல்

புயல்

இதனால் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்தப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். இதையடுத்து இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.

பரிந்துரை

பரிந்துரை

மேலும் இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டப்படும். இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரைத்துள்ளது.

மழை

மழை

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெப்பத்தால் அவதியுறும் சென்னை மக்களுக்கு மழையை கொடுக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
New low pressure to be formed in Bay of Bengal that will be named as Yaas, coined by Oman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X