வேற லெவலில் மாறப் போகும் "ஈசிஆர்.." அந்தப் பக்கம் போனால் இதை கவனிக்க தவறாதீங்க.. மாஸ் சம்பவம்
சென்னை: அடுத்த முறை ஈசிஆர், அதாவது கிழக்கு கடற்கரைச் சாலை பக்கம் போகும் போது, அங்கே இதைக் கவனிக்க மறக்காதீர்கள். ஈசிஆர் சாலையில் முக்கிய நடவடிக்கையை நெடுஞ்சாலை ஆணையம் எடுத்துள்ளது
இந்தியாவில் இப்போது சாலை போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.

சரக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவைக் குறைக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல பணிகள் நடந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்: இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்போது புதியதொரு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. அடுத்த முறை ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுச்சேரிக்குச் செல்லும் போது சாலை ஓரங்களைக் கவனிக்க மறக்காதீர்கள். பசுமையான ஈசிஆர் சாலைகளை உருவாக்கும் முயற்சியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்டமாகச் சாலையோரத்தில் சுமார் 22,500 மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இது ஒரு கடலோர சாலை என்பதால், அதிக எண்ணிக்கையில் தென்னை மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்துள்ளோம். ஏனெனில் இந்த ஏரியாவில் அவை தான் எளிதாக வளரும். நிலப்பரப்புக்கும் ஏற்றதாக இருக்கும்.
சூப்பர் பிளான்: சுமார் மூன்றடி உயர மரக்கன்றுகளை நாங்கள் நட்டு வருகிறோம்.. உயரமாக வளரக் கூடிய தென்னை ரகங்களைத் தேர்வு செய்து நட்டு வருகிறோம். சாலையோரத்தில் மொத்தம் 3 ரக மரங்களை நடத் திட்டமிட்டுள்ளோம். வெளியில் பெரும்பாலும் தென்னை மரங்கள் இருக்கும். சாலையை ஒட்டிய வரிசையில் வேம்பு, புங்கை போன்ற மண்ணிற்கு ஏற்ற இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, 600 மரக்கன்றுகள் நடும் பணிகள் நிறைவடைந்ததாகவும் மீதமுள்ள மரக்கன்றுகளை நடும் பணி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். முதற்கட்டமாக மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ., தூரத்திற்கு, 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. சாலையை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரே இதில் 22,500 மரக்கன்றுகள் நட இருக்கிறார். மீதி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நடப்படும்.
இதற்கு தேவையான மரக்கன்றுகளைக் கொள்முதல் செய்யவும் நடும் பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறையுடன் நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 45,500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை ஆணையம் ₹5.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் ஈசிஆர் முழுக்கவே பசுமையாக மாற போகிறது.
பசுமை: மாமல்லபுரத்திற்கு அடுத்துள்ள பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டே இந்த சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இப்போது புதிய மரங்களை நட்டு நெடுஞ்சாலை ஆணையும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த பகுதியில் பசுமையைத் தக்க வைக்க முடியும்.
இந்தியாவில் இப்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சரக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஆகும் செலவைக் குறைக்கவே இந்தப் பணிகள் நடப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். இதற்காகச் சாலையோரம் இருக்கும் மரங்கள் வெட்டப்படும் நிலையில், அதற்கேற்ப புது மரக்கன்றுகளை நட வேண்டும்.. இப்போது பல இடங்களில் சாலைப் பணிகள் நடந்து வருவதால், மரக்கன்றுகள் தேவை அதிகரித்துள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications