’பரபரப்பு’ கைக்கு வந்த லிஸ்ட்.. ஒருபக்கம் என்ஐஏ.. இன்னொரு பக்கம் போலீஸ்.. சென்னையில் திடீர் சோதனை!
சென்னை: சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் ஒரு பக்கமும், காவல்துறையினர் இன்னொரு பக்கமும் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 45 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் கோவையில் மட்டும் கோட்டைமேடு, உக்கடம், பொன்விழா நகர் உள்ளிட்ட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. புதுப்பேட்டை, பெரம்பூர் ஜமாலியா, மண்ணடி ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ, போலீஸ் சோதனை
ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் காவல்துறையினர் தனியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டேரியில் சலாவுதீன் என்பவர் வீட்டில் வண்ணாரப்பேட்டை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் போலீஸ் சோதனை
அதேபோல் எம்கேபி நகரில் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் என்ஐஏ அதிகாரிகள், மறுபக்கம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை கார் வெடிப்பு
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த காரில் இருந்தவர் ஜமோசா முபின் என தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வீட்டை சோதனையிட்டபோது, வெடிகுண்டு தயாரிக்க தேவையான 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜமோசா முபினின் உறவினர்கள் உட்பட 6 பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

என்ஐஏ விசாரணை
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. பின்னர் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் 45 இடங்களில் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications