தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 9 இடங்களில் திடீர் சோதனை.. சென்னையில் பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையில் ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தொடர்புடையதாக முகமது ஆசிக் என்பவர் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த முகமது ஆசிக் கோவையில் இருந்து தப்பி மயிலாடுதுறை அருகே உள்ள நீடூரில் உள்ள கோழிக் கடை ஒன்றில் வேலை பார்த்தது தெரியவந்தது.

கோழிக் கடை
இதையடுத்து மயிலாடுதுறையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை நீதிமன்ற உத்தரவுப்புடி பிடிவாரண்டில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி என்ஐஏ அதிகாரிகள்
டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்படட வழக்கிற்காக ஆதாரங்களை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் முதற்கட்டமாக தெரிவித்துள்ளார்கள்.

சென்னையில் 4 இடங்கள்
சென்னையில் மட்டும் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் காரைக்காலிலும் இந்த சோதனை விரிவடைந்துள்ளது. ஏதாவது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகளின் சோதனையின் முடிவில் தெரியவரும். என்ஐஏ சோதனையால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகள்
பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளை விசாரணை நடத்தும் அமைப்புதான் இந்த தேசிய புலனாய்வு முகமை. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்தால் அவர்கள் தொடர்பான விவரங்களை அறிய அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கமானதாகும்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications