அதிகாலை 3 மணி முதல்! தமிழகத்தின் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு! சென்னையில் அல் பாசித் கைது
சென்னை: சென்னை, சீர்காழி உள்பட தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நடத்தப்பட்ட சோதனையில் ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக மயிலாடுதுறையை சேர்ந்த அல் பாசித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்ஐஏ தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் அதன் பணியாகும்.

இந்த நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் இந்த சோதனை நடைபெறுகிறது. சீர்காழி திருமுல்லைவாசல் கிராமத்திலும் பாசல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நசீர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் வீடுகளிலும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாலை 3 மணி முதலே இந்த சோதனைகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வந்தனர்.
இந்த சோதனையில் சென்னையில் நடந்த சோதனையில் மயிலாடுதுறையை சேர்ந்த அல் பாசித் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் சென்னையில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வந்தாராம். சீர்காழியிலும் 6 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவடைந்தது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications