• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரயில்வே அப்படி செய்யக்கூடாது.. ஊட்டி மலை ரயில் குறித்து ரயில்வேக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

|

சென்னை: எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது என ஊட்டி மலை ரயில் விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  சென்னை: மலை ரயில் வாடகையா..? எதிர்க்கும் கமல்.. கொண்டாட்டம், குதூகலம்… காசு உள்ளவர்களுக்கு மட்டுமா..?

  வரலாற்று சிறப்பு மிக்க ரயில் என்றால் அது மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் தான். இந்த ரயில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி என்ஜினிலும், அதன்பிறகு குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜினிலும் இயக்கப்படுகிறது.

  இந்த ரயில் உலகப்புகழ் பெற்றதாகவும், இந்த ரயிலில் பயணிக்க இடம் கிடைப்பது மிகவும் அபூர்வம் ஆனது. இந்நிலையில் இந்த மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டதாகவும், கட்டணம் கடுமையாக உயர்ந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

  போயஸ் கார்டனில் கண்காணிப்பு அதிகரிப்பு... சொந்தப் பணத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் ரஜினி..!

  12000 கட்டணம் என பரவல்

  12000 கட்டணம் என பரவல்

  இனி ஊட்டி மலை ரயில் சாதாரண மக்களுக்கு கிடையாதா என்று பலரும் கேட்க தொடங்கினர். அதாவது 'டி.என்.43' என்ற பெயரில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை தனியார் மூலம் ரயில் தொடங்கப்பட்டதாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் காட்டுத்தீயாக பரவின

  காவிவண்ணத்தில் பணி பெண்

  காவிவண்ணத்தில் பணி பெண்

  மேலும் சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள், காவி வண்ணத்தில் உடை அணிந்து காட்சியளித்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து ஊட்டி மலை ரயில் தனியார் வசமானதா, கட்டணம் உயர்த்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது, ஆனால் இதை ஒட்டுமொத்தமாக மறுத்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

  வாடகைக்கு விட்டோம்

  வாடகைக்கு விட்டோம்

  இது குறித்து தெற்கு ரயில்வே தனியார் ஊடகத்தின் கேள்விக்கு பதில் அளிக்கையில் , "ஊட்டி மலை ரயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டது என்ற செய்தி முற்றிலும் தவறானது. அதேபோல மலை ரயிலுக்கான கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஒரு தனியார் நிறுவனம் ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்து அதாவது Chartered Trip சென்றது. பொதுவாக சாதாரண கட்டணத்தை காட்டிலும் இதுபோன்ற மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்படும் ரயிலின் கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும். மேலும், பணிப்பெண்கள் காவியுடையில் இருப்பது, ரயிலின் பெயர் மாற்றப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் பொய்யானது. ஊட்டி மலை ரயில் இப்போது வரை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது" உள்ளது என்று தெரிவித்தது.

  என்ன சொன்னார்

  என்ன சொன்னார்

  இதனிடையே ஊட்டி மலை ரயில் விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறுகையில். பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும். எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது" என்றார்.

   
   
   
  English summary
  MNM party leader Kamal Haasan on nilgiri mountain railway ticket price. " the railways should not create a situation where any small celebration or celebration is possible only for those who have money"
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X