ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா!
சென்னை: நடிகர் ரஜினி குறித்து, தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேநேரம், பாஜக கூட்டணி தலைவர்களும் விமர்சித்திருக்கிறார்கள். அப்படியெனில் பாஜகவுடன் தவெக கூட்டணிக்கு போகவில்லையா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்ற தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக பாஜகவுடன் என்டிஏ கூட்டணியில் விஜய் இணையலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டன.

ரவுண்டு கட்டப்பட்ட ஆதவ் அர்ஜுனா
இந்த விஷயம் பேசுபொருளாவதற்கு முன்னர்தான், ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசியிருந்தார். திமுக கொடுத்த பயத்தால், ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், ரஜினி அப்பேற்பட்ட ஆள் கிடையாது. ஒரு பெரும் ஆளுமையை இப்படி, அவதூறாக பேச கூடாது என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது இயல்பானதுதான். இருப்பினும், திடீரென பாஜக மற்றும் அதன் கூட்டணிகளும் கூட கண்டனம் தெரிவித்தன. இதுதான் கவனம் பெற்றிருக்கிறது.
விரிச்சுவர் வாரியர்களின் ஆதங்கம்
சமீபத்தில் பனையூர் இல்லத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், கூட்டணிக்கு போகலாமா? என்று தவெக தலைமை, நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியிருப்பதாகவும், அதற்கு நிர்வாகிகள் சிலர் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படியெனில் கொள்கை எதிரி பாஜகவுடன் கூட்டணியா? இதையெப்படி சமாளிக்க போகிறோம் என விரிச்சுவல் வாரியர்கள் புலம்பினர். ஏற்கெனவே சங்கீதா விவாகரத்து வழக்கில் விஜய்க்கு சப்போர்ட் செய்ய.. படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். இதில் இதுவேறையா? என்று ஆதங்கப்பட்டனர்.

கண்டனம் முழங்கிய பாஜக
இப்படி இருக்கையில், பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதில் ஒரு விஷயம் உறுதியாகியிருக்கிறது. அதாவது தவெக, பாஜகவுடன் கூட்டணிக்கு போகவில்லை என்பதுதான்.
பாஜக முன்னாள் மாநில தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், "ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம்" என்று பதிவிட்டிருக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், "ரஜினிகாந்த் தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர். உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அவர் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையதல்ல. மக்கள் நிராகரிப்பார்கள்" என்று கூறியிருக்கிறார்.
கூட்டணி கிடையாது
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பரப்பும் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம்" என்று கூறியிருந்தார்.
ஆக, தவெக கூட்டணியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தவெக நிர்வாகிகள் சிலரிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், சில நிர்வாகிகள் தேர்தலில் எப்படி ஜெயிக்கப்போகிறோமோ என கவலையடைந்திருக்கின்றனர்.
-
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
'காப்பி-கேட்' கிங்? அரசியலிலும் ரஜினி பாணி.. பாடலை வாரி சுருட்டி விஜய்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம்











Click it and Unblock the Notifications