இன்றுடன் சேர்த்து 41ஆவது நாள்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை! பொதுமக்கள் சற்றே நிம்மதி
சென்னை: இந்தியாவில் தொடர்ந்து 41ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை
சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி அன்று மாற்றி அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது.

பிப். - மார்ச் மாதங்களில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல கடந்த மாதம் மட்டும் பெட்ரோல் விலை 9.56 ரூபாயும் டீசல் விலை 9.86 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நாட்டில் பல மாநிலங்களில் பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற போக்குவரத்து சேவைகளின் கட்டணம் உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல நிறுவனங்களும் தங்கள் பொருட்களின் விலையைக் கணிசமாக உயர்த்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித மாற்றமும் இன்றி ஒரே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றும் 41ஆவது நாளாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67க்கு விற்கப்படுகிறது. அதேபோல மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 120 ரூபாய்க்கும், டீசல் 104 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications