சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸிஜன் படுக்கைக்கு இனி தட்டுப்பாடு இருக்காது வந்த ஒரே வாரத்தில் தீயாய் வேலை செய்யும் ககன்தீப் சிங்

Google Oneindia Tamil News

சென்னை: ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு இருக்காது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை மக்களுக்கு புதுவித நம்பிக்கை பிறந்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்த ஒரு வாரத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? மருத்துவமனைகளில் படுக்கை வசித இல்லாததால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் மருத்துவமனை வாயில்களில் காத்திருந்தனர்.

இதனால் புதிதாக உடல்நிலை பாதித்தோரை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பலரும் ஆட்டோக்களை ஆம்புலன்ஸாக மாற்றினார்.

ஆம்புலன்ஸ் இல்லன்னா என்ன!.. கார்களை எல்லாம் ஆம்புலன்ஸா மாத்தலாமே.. மாத்தி யோசித்த ககன்தீப்! ஆம்புலன்ஸ் இல்லன்னா என்ன!.. கார்களை எல்லாம் ஆம்புலன்ஸா மாத்தலாமே.. மாத்தி யோசித்த ககன்தீப்!

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்கள்

பார்த்தார் ககன்தீப் சிங், உடனே எஸ்யூவி கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றினார். அதிலேயே ஆக்ஸிஜனும் கொடுக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் படுக்கை இல்லாவிட்டால் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்டு அங்கேயே ஆக்ஸிஜன் தரப்படுகிறது. பேரிடர் காலம் என்பதால் இந்த சேவையைத் தற்காலிகமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

போதுமான வசதிகள்

போதுமான வசதிகள்

அவற்றிற்கு சிறப்பு ஆம்புலன்ஸ்கள் என பெயரிட்டிருந்தார். இதையடுத்து 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இது போல சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகள், சுமார் 500 பேருக்கு போதுமான வசதிகளை கொண்டிருக்கிறது.

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

இதனால் தற்போதைக்கு சென்னையில் படுக்கை வசதி தேவைப்படுவோர் பெரும்பாலானோர் பலனடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எடுத்துள்ள இந்த முயற்சிகள் வரும் நாட்களில் சென்னையில் கொரோனாவை எதிர்கொள்வதில் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என தெரிகிறது.

பொதுமக்கள்

பொதுமக்கள்

இனி சென்னையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருக்காது என மக்களுக்கு புதுவிதமான புத்துணர்ச்சியை கொடுத்துள்ளார் ககன்தீப் சிங். விரைவில் கொரோனாவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துவிடும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

English summary
Chennai Corporation Commissioner Gagandeep Singh Bedi says that hereafter no crisis for Ambulance in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X