செப்.1 முதல் பேருந்துகள் இயக்கம்- வழிபாட்டு தலங்கள் திறப்பு... இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டாலும் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்படும், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளால் தமிழகம் 6 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்ப இருக்கிறது.
Recommended Video
கொரோனா பரவலால் உலகமே பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழகம் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் 2-வது இடத்தில் இருக்கிறது.

கொரோனா குணமாதல் அதிகரிப்பு
இன்னொருபக்கம் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை சுமார் 76% ஆக உள்ளது. இதனால் மத்திய அரசு லாக்டவுன் கால பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியது.

அதிரடி அறிவிப்புகள்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் இ பாஸ் முறை ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டது. இதில் மிக முக்கியமாக மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது; வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்
மேலும் வணிக வளாகங்கள், ஷோரூம்கள் வழக்கம் போல இயங்கலாம். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து கடைகளும் இரவு 8 மணிவரை இயங்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

தீவிர லாக்டவுன் ரத்து
மிக முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கிகள், அதுசார்ந்த நிறுவனங்கள் 100% பணியாளர்களுடம் இயங்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இயல்பு நிலை திரும்ப இருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications