இதுக்குத்தான் தோனி விவசாயம் செய்கிறாரா? பட்ஜெட்டில் வந்த அறிவிப்பை பார்த்தீங்களா.. மாஸ்டர்பிளான்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி வேறு பெரிய பிஸ்னஸ் செய்யாமல் விவசாயம் செய்வது ஏன் என்பது தொடர்பாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர். நேற்று பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வந்ததை தொடர்ந்து இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
நேற்று பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ50,000-ல் இருந்து ரூ75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ15லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும், என்று சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டு உள்ளன.
அதிக வரி: வருமான வரி (வருமான வரி) மற்றும் கார்ப்பரேட் வரி என இரண்டு கூறுகளைக் கொண்ட நேரடி வரிகளில் இந்தியா தொடர்ந்து உயர்வை கண்டு வருகிறது. இதில் கவலை அளிக்கும் விஷயம் 2022-2023ல் கார்ப்பரேட் வரிகளை முந்தி உள்ளது தனிநபர் வருமான வரி. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர்.
அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வரி செலுத்துவீர்கள். உங்கள் நிறுவனம் வரி செலுத்தும். உதாரணமாக உங்களின் வருமானம் 2 லட்சத்திற்கு நீங்கள் செலுத்தும் வரியை விட.. உங்கள் நிறுவனம் செலுத்தும் வரி குறைவாக இருக்கும். வரி அடிப்படை அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்ப்பரேட் வரியை விட வருமான வரி குறைவு. அமெரிக்காவில் 43% மக்கள் வரி செலுத்துகிறார்கள், இந்தியாவில் 2% பேர் வரி செலுத்துகிறார்கள்.
தோனி மாஸ்டர் பிளான்: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி வேறு பெரிய பிஸ்னஸ் செய்யாமல் விவசாயம் செய்வது ஏன் என்பது தொடர்பாக நெட்டிசன்கள் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர். நேற்று பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் வந்ததை தொடர்ந்து இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் விவசாயத்திற்கு வரி இல்லை. பல கோடி வருமானம் வந்தாலும் வரி இல்லை. தோனி விவசாயத்தில் முதலீடு செய்தார். விவசாயம் செய்கிறார். உள்ளூர் சந்தையில் தனது பொருட்களை விற்கிறார். விவசாய வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி. கூடுதலாக, மானியங்களை பெறுவார். அவரிடம் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை உள்ளது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
தோனி ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் விவசாயத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications