நகைக்கடன் தள்ளுபடி இல்லை.. ஆனா 1 சவரன் தங்கம் சாத்தியமா? அதுவும் நகை விக்குற விலையில் விஜய் தருவாரா?
சென்னை: நகைக்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை தவெக தலைவர் விஜய், தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான வாக்குறுதியை அவர் தரவில்லை.. இந்நிலையில், "8 கிராம் தங்கம், அதாவது 1 பவுன் தங்க நகை கல்யாணம் ஆகக்கூடிய பெண்களுக்கு உடனடியாக போட வேண்டும். இன்னைக்கு தங்கம் விக்கிற நிலையில், திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 1 சவரன் தங்கம் விஜய்யால் வழங்க முடியுமா? என்று மூதத பத்திரிகையாள்ர தராசு ஷ்யாம் சந்தேகம் கிளப்பி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், இதுகுறித்த எதிர்பார்ப்புகள் மெல்ல எழ துவங்கி உள்ளன.

தவெக மெஜாரிட்டி இல்லை
இந்நிலையில், சேனல் ஒன்றிற்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், விஜய் சந்திக்க போகும் நிர்வாக சிக்கல்களை விவரித்துள்ளார்.. அத்துடன், மக்களிடம் சொன்ன வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றுவார்? என்றம் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.
தராசு ஷ்யாம் பேசும்போது, "தவெக இப்போது இந்த வெற்றியில் மகிழ்ச்சி அடைந்தாலும், அதே சமயம் அச்சப்படவும் வேண்டும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஆதரவை மாற்றிக்கொள்ளலாம். ஏனென்றால், "கல்லெறிந்தவர்கள் மாலை போடுவார்கள், மாலை போட்டவர்கள் கல்லெறிவார்கள்" என்பது அண்ணாவின் வசனம்..
1 பவுன் தங்க நகை
ஏகப்பட்ட வாக்குறுதிகளை சொல்லி இருக்கிறார் விஜய்.. தேர்தல் வாக்குறுதிகள் மிகவும் பிரம்மாண்டமானவை, அவற்றை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன.
கல்யாணம் ஆகக்கூடிய பெண்களுக்கு 1 பவுன் தங்க நகை தரவேண்டும்.. 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், மற்றும் முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாய் போன்ற வாக்குறுதிகள் உள்ளன.. இவைகளை எல்லாம் மக்கள் உடனடியாக எதிர்பார்ப்பார்கள். இவை நீண்டகால திட்டங்கள் அல்ல, முதல் இரண்டு மூன்று மாதங்களிலேயே செய்ய வேண்டியவை. தங்கம் விலை ஒரு லட்சம் 25 ஆயிரம் நெருங்கும் நிலையில், இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு ஒரு பவுன் தங்கம் வழங்குவதற்கான நிதி எங்கிருந்து வரும்.
இலவச பேருந்து பயணம் சாத்தியமா
மகளிருக்கு மாநிலம் முழுவதும் இலவசப் பேருந்து பயணம், உதாரணமாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சாத்தியமா? ஏற்கனவே போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலைகள் உயர்ந்து வரும் சூழலில், இலவச சிலிண்டர் வழங்குவது எப்படி சாத்தியம்.
இவை அனைத்தும் நீண்டகாலத் திட்டங்கள் கிடையாது. ஆட்சிக்கு வந்த அடுத்த 2 அல்லது 3 மாதங்களிலேயே மக்கள் இவற்றைச் செய்யும்படி எதிர்பார்ப்பார்கள்.
அதிகாரிகள் நியமனம் - நடைமுறை சிக்கல்
தற்போதுள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏற்கனவே திமுக அல்லது அதிமுக ஆட்சியில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். எடப்பாடி அல்லது ஸ்டாலின் ஆட்சியில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு மூன்றாவது செட் அதிகாரிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.
ஆனால் அவர்களுக்குத் துறை சார்ந்த அனுபவம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அமைச்சர்களுக்கும் அனுபவம் இருக்காது, அதிகாரிகளுக்கும் போதிய அனுபவம் இருக்காது என்ற சூழல் உருவாகலாம் அதனால் அதிகாரிகளை எப்படி சமாளிப்பது?
த.வெ.க-விற்கு விசுவாசமான அல்லது அனுபவமிக்க புதிய அதிகாரிகளைக் கண்டறிந்து நிர்வாகத்தைச் சீரமைப்பது எளிதான காரியமல்ல மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி த.வெ.க-விற்கு வாக்களித்துள்ளதால், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி த.வெ.க சிறப்பாகச் செயல்பட வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications