பாஜகவும் ஏமாத்திருச்சே! விஜயதாரணிக்கு எம்.பி சீட் இல்லை.. இடைத்தேர்தல் வாய்ப்பாவது கிடைக்குமா? அடடா!
சென்னை: அண்மையில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி, கன்னியாகுமரி எம்.பி சீட் கேட்டு வந்த நிலையில், மீண்டும் பொன்னாருக்கே பச்சைக்கொடி காட்டியுள்ளது பாஜக தலைமை. எனவே விளவங்கோடு இடைத்தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மூன்று முறையாக தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.

விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்துக் காத்திருந்தார். ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது.
மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து, பாஜக தலைவர்கள் விஜயதாரணியிடம் வலை வீசி, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். சில நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தார் விஜயதாரணி.
இந்நிலையில் அண்மையில் டெல்லியிலேயே பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார். விஜயதாரணி கட்சி தாவியதால் அவர் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ பதவி பறிபோனது.
விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட் தரவேண்டும் என பாஜகவிடம் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் என விஜயதாரணி நிர்ப்பந்தம் செய்து வந்ததாக கூறப்பட்டது. இதனால், கன்னியாகுமரி தொகுதியில் 9 முறையாக போட்டியிட்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக விஜயதாரணிக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்தன.
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் பொன்.ராதாகிருஷ்ணன் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், பொன்.ராதாகிருஷ்ணனை கைவிட்டுவிட மாட்டார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். அதேசமயம், முக்கியமான மாநிலம் ஒன்றில் ஆளுநர் பதவி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால், மீண்டும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். விஜயதாரணிக்கு எம்.பி சீட் வழங்கப்படவில்லை. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சீட் கேட்டு அங்கு மறுக்கப்பட்டதால் பாஜகவில் பேசி இணைந்த விஜயதாரணிக்கு பாஜகவிலும் எம்.பி சீட் வாய்ப்பு வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற இருப்பதால், விளவங்கோடு எம்.எல்.ஏ சீட் விஜயதாரணிக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விளவங்கோடு தொகுதியில் 3 முறை கை சின்னத்தில் நின்று வென்ற விஜயதாரணிக்கு, இந்த முறை பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? அதில் அவர் வெற்றி பெறுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications