பத்திர பதிவு: பொதுமக்களே பண்ணலாம்.. ஆவண எழுத்தர்கள் தேவையில்லை! தமிழக அரசு சூப்பர் வசதி! இதோ வழிமுறை
சென்னை: பத்திர பதிவு துறையில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யத்தை களையும் விதமாக சூப்பர் நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்துள்ளது. இந்த புதிய வசதியின் படி, இணையதளத்தில், பதிவு செய்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தர், வக்கீல் ஆகியோருக்கு பதிலான சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும். இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாகி விடும். அந்த ஆவணத்திற்கு உரிய அரசு கட்டணத்தை செலுத்தினால் போதும். நாள், நேரத்தை முடிவு செய்த பின்னர் ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து ஆஜராகி வழக்கம் போல் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆவண எழுத்தர்கள், வக்கீல்கள் இன்றி பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. லஞ்சத்தை ஒழிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இது தொடர்பான தகவலை முன்னணி நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இடைத்தரகர்கள் இல்லாத நிலை
அரசின் பல்வேறு துறைகளிலும் ஏற்படும் காலதமாதம், லஞ்ச பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை களைய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல துறைகளில் இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக அனைத்து வருவாய்த்துறை சான்றிதழ்களையும் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து தங்களது ஆவணங்கள் அடிப்படையில் எளிதாக பெற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, கட்டிட வரைப்படங்களை பொதுமக்கள் யார் தயவும் இல்லாமல் சுயசான்றிதழ் முறையில் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் பலரின் வீடு கட்டும் திட்டங்கள் யாருக்கும் பணம் எதுவும் கொடுக்காமல் எளிதாக நிறைவேறி வருகிறது.
பொதுமக்களே பதிவிறக்கம் செய்யலாம்
தமிழக அரசு துறைகளில் லஞ்சம் அதிக புரளும் துறையாக இருப்பது பத்திரபதிவுத்துறைதான். எனவே பத்திரப்பதிவு துறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வர அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தற்போது 1975 ஆம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ் மற்றும் 1950 ஆம் ஆண்டு முதல் நகல் பத்திரங்களை எளிதாக https://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் தாங்களாகவே பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல் திருமண பதிவு நடைமுறையும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அதன் அடுத்தக் கட்டமாக தற்போது பொதுமக்களே ஆவணங்களை நேரடியாக தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளையும் பத்திரப்பதிவுத்துறை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இதுவரை நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை பதிவு செய்ய பத்திர எழுத்தர்கள், வக்கீல்கள் மூலமே ஆவணங்களை பதிவு செய்யும் நிலை இருந்தது.
எப்படி பதிவு செய்வது
ஆனால் இனி அந்த நிலை இல்லை. பொதுமக்களே நேரடியாகவே ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான சீரமைப்பு பணிகள் வெப்சைட்டில் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களே எளிதாக ஆவணங்களை உருவாக்கலாம். ஆவணங்களின் வகை, அதாவது விற்பனை ஆவணம், தானசெட்டில்மெண்ட், பாகப்பிரிவினை போன்றவற்றை முதலில் பதிவு செய்ய வேண்டும்.
* அதன்பிறகு விற்பவர் பெயர், வாங்குபவர் பெயர், நிலம் அமைந்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம், கிராமம், சர்வே எண், நிலத்தின் அளவு உள்ளீடுகளை பதிவு செய்தால் ஆவணம் தானாக உருவாகி விடும்.
தொலைபேசி எண்
* அதில் பதிவு செய்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தர், வக்கீல் ஆகியோருக்கு பதிலான சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும்.
* இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாகி விடும். அந்த ஆவணத்திற்கு உரிய அரசு கட்டணத்தை செலுத்தினால் போதும்.
* நாள், நேரத்தை முடிவு செய்த பின்னர் ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து ஆஜராகி வழக்கம் போல் பதிவு செய்து கொள்ளலாம்.
* இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 18001025174 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications