Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு பதிவா?.. வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் ரகுபதி பதில் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுக்கு சங்கர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை" என்று கூறினார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

No need for the DMK Govt to file false case against Savukku Shankar says Minister Raghupathi

அமைச்சர் ரகுபதி பதில்: இதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. சவுக்கு சங்கர் விவகாரத்தில் உரிய சாட்சியங்களோடுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என எங்களுக்கு தகவல்கள் வருகின்றன" என்றார்.

தொடர்ந்து தனது பேட்டியில் அதிமுகவை சாடிய ரகுபதி கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுவது பற்றி கேட்கிறீர்கள். எதிர்க்கட்சி தலைவர் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்ற வேண்டும். அப்போது தான் சரியான எதிர்கட்சியாக இருக்கும். அதனை விட்டு வேறுவிதமான விமர்சனங்களை வைக்கும் போது அவரது பதவிக்கே ஒரு ஆபத்து ஏற்பட்டு விடும்.

அதிமுகவில் பிளவு ஏற்படும்: ஆனால் அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. அவா் பல்லாண்டு வாழ திமுக வாழ்த்தும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையிலா? என்று அங்கு மிகப்பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனை நாங்கள் செய்யமாட்டோம். ஆனால் பாஜக செய்யும்.

லோக்சபா தேர்தலில் 40 - 40 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். குஜராத்தில் கூட பாஜக 10 இடங்களை வெல்வது என்பது அரிதான ஒன்று தகவல்கள் வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்றாக உள்ளது" என்றார்.

குஜராத்தில் கூட பாஜக வெற்றிபெறாது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் திமுக மருத்துவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரகுபதி கூறியதாவது:- பிரதமர் மோடியின் பிரச்சாரம் ஒன்றே போதும் பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு.

பாஜகவுக்கு தோல்வி ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் ஆத்திரத்தோடும் இந்தியா கூட்டணியின் மீது வெறுப்பை உருவாக்குகின்ற வகையில் அவர் பேசுகின்ற பேச்சு பாஜக ஆட்சியை இழந்து விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. உதாரணத்திற்கு குஜராத்தில் கூட பத்து இடங்களை கூட பாஜக வெற்றி பெறுவது அரிதான ஒன்று என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது"என்றார்.

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ்: யூடியூப் சேனல்களில் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், மற்றும் அரசு அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து கூறிய தகவல் சர்ச்சையானது. பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் அவரது கருத்து இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, கோவையில் பெண் சப் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் அவர் கடந்த 4-ந்தேதி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். தேனி அருகே பழனிச்செட்டிபட்டியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்யும்போது அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் 2-வது வழக்கை பதிவு செய்தனர்.

மொத்தம் 8 வழக்குகள்: இந்த கஞ்சா வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சேலம், திருச்சி போலீசாரால் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக சி.எம்.டி.ஏ. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மொத்தம் 8 வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து கஞ்சா சிகரெட்டுகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தொடர்ந்து அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+