தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது.. பதற்றம் வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை: தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியமில்லாதது, பதற்றம் வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லதே தவிர கட்டாயம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவிலும் கொரோனா பரவல் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வந்ததன் காரணத்தால் 2023 மே 5 ஆம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது. தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த ஆய்வில் இவை வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் என்பது உறுதியாகி உள்ளது.
மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. பதற்றம் வேண்டாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல, ஆனால் மாஸ்க் அணிவது நல்லது. இணைநோய் உள்ளவர்கள், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பான மருத்துவமனை கட்டமைப்பு உள்ளது, அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக வார்டுகள் தயாராக உள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தல் வழக்கமான ஒன்றுதான்; பதற்றப்பட வேண்டியது இல்லை. கொரோனா தொடர்பான வதந்திகள்தான் மிகப்பெரிய நோய். இந்த வதந்திகளைக் கிளப்பாமல் இருப்பதுதான் நல்லது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் முதியவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்தன." தெரிவித்துள்ளார்.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications