திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட்
சென்னை: திருமணமான ஒரு ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால், அதற்காக அவர் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒழுக்கத்தையும் , சட்டத்தையும் (Law) தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும். சட்டப்படி ஒரு செயல் குற்றம் என்று வரையறுக்கப்படாத வரை, சமூகத்தின் கருத்துக்களோ அல்லது ஒழுக்க நெறிகளோ குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிக்காது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூகத்தின் பார்வையில் ஒரு விஷயம் 'தவறு' அல்லது 'ஒழுக்கக்கேடு' என்று கருதப்பட்டாலும், அது நாட்டின் சட்ட புத்தகத்தில் 'குற்றம்' என்று எழுதப்படாத வரை, ஒருவரைத் தண்டிக்க முடியாது. குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதே கடமை என்று நீதிமன்றங்கள் கூறி வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும், ஏற்கனவே திருமணமான ஒரு ஆணும் பரஸ்பர சம்மதத்துடன் 'லிவ்-இன்' முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதனிடையே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், "திருமணமான இந்த நபர், எங்கள் மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே திருமணமான ஒருவர் மற்றொரு பெண்ணுடன் வாழ்வது சட்டப்படி குற்றம்" என்று வாதிட்டார்கள்..
பெண்ணின் குடும்பத்தினர் தங்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவதாகவும், 'கௌரவக் கொலை' செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறி, அந்த ஜோடி பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து. அப்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முககிய அம்சங்களை பார்க்கலாம்
சட்டம் vs ஒழுக்கம்
திருமணமான ஒரு ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருந்தால், அதற்காக அவர் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒழுக்கத்தையும் , சட்டத்தையும் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும். சட்டப்படி ஒரு செயல் குற்றம் என்று வரையறுக்கப்படாத வரை, சமூகத்தின் கருத்துக்களோ அல்லது ஒழுக்க நெறிகளோ குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிக்காது
கைது செய்யத் தடை
18 வயது பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்தவர் மீது பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 87-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை அடுத்த உத்தரவு வரும் வரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
காவல்துறையின் கடமை
"ஒன்றாக வாழும் இரண்டு வயது வந்த நபர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் அடிப்படை கடமை" என்று கூறி, ஷாஜஹான்பூர் எஸ்பி அந்த ஜோடியின் பாதுகாப்பிற்கு நேரிடையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடும்பத்தினருக்குக் கட்டுப்பாடு
பெண்ணின் குடும்பத்தினர் அந்த ஜோடியைத் தொடர்பு கொள்ளவோ, அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லவோ அல்லது எந்த வகையிலும் மிரட்டவோ கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் குறிப்பிட்ட ஜோடியின் மனுவை ஏற்றுக்கொண்டு, அரசுத் தரப்பு இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த ஜோடிக்கு முழுமையான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications