ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உதகையில் ஏ.டி.எம். இயந்திரத்துக்கு பணம் நிரப்ப சென்ற வாகனத்தில் ரூ.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையாக ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தேர்தல் பறக்கும்படையினரால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் பள்ளி மேலாளர் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பள்ளி கட்டணமாக வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஜெயங்கொண்டம் பகுதியில் ரூபாய் 12 லட்சம், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது. அதனையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications