"சிறப்பு வகுப்பு கூடாது".. நாளை முதல் 9 நாள் காலாண்டு விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது. மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் 10ம் தேதி முதல் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு இன்றுடன் முடிவடைந்தது.

அதேபோல், பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு இன்றுடன் முடிவுக்கு வந்தது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மதிய வேளையிலும் நடைபெற்றது .
இதையடுத்து, மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நாளை (செப்டம்பர் 27) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையில்தான் ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே தான் காலாண்டு விடுமுறையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
இதற்கிடையே, காலாண்டு விடுமுறையில் ஆசிரியர்களை பணிக்கு வர வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியபோது, ''காலாண்டு விடுமுறை நாட்களில் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த முடிவை கைவிட்டு காலாண்டு தேர்வு விடுமுறையை முழுமையாக எடுத்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வழிசெய்ய வேண்டும்'' என்றனர்.
இதுபற்றி பள்ளி கல்வித்துறைக்கும் புகார்கள் சென்றன. இந்நிலையில் தான் தனியார் பள்ளி இயக்குநர் சார்பில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது. மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்து இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications