சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருவர் கூட தமிழர் இல்லையா? நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் நியமனத்துக்கு திருமாவளவன் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 300 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் GET என்னும் பட்டதாரி பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பேரில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சார்ந்தவரில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

 No Tamil employees appointed on Neyveli coal company - Thirumavalavan condemns

விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்புக் கிட்டாத வகையில் அறிவிப்புச் செய்ததை ரத்து செய்யக்கோரி CMD அவர்களுக்கு கடந்த 11 ஆம் தேதி கடிதம் எழுதினேன். மனித வளத்துகான பொறுப்பு இயக்குநரிடம் தொலைபேசியில் வலியுறுத்தினோம். ஆனால் தேர்வை நடத்தி முடித்தனர்.

எதிர்பார்த்ததைப் போல தேர்வானவர்களில் ஒருவரும் தமிழர் இல்லை. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தில் தமிழர் ஒருவருக்கும் வேலை வாய்ப்பில்லை என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.

Recommended Video

    3-வது அணி வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் சிறப்புப் பேட்டி

    எனவே இத்தேர்வை ரத்து செய்துவிட்டு் மீண்டும் முறைப்படி அறிவித்து தேர்வை நடத்தி தமிழர்களை பணியிலமர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    No Tamil employees appointed on Neyveli coal company - Thirumavalavan condemns: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 300 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X