எகிறி அடிக்கும் வடசென்னை.. "மொத்தமாக முடிஞ்சுது.." சில மாதங்களில் தலைகீழாக மாறுதே! மெகா ஜாக்பாட்
சென்னை: வடசென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இப்போது வரும் நிலையில், இது வடசென்னையை மொத்தமாக மாற்றிப்போடுவதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
எப்போதும் சென்னையை வடசென்னை, தென்சென்னை எனக் கூறுவார்கள். வடசென்னையில் பொதுவாக வளர்ச்சி திட்டங்கள் இருக்காது என்பது பரவலான குற்றச்சாட்டு. அதேநேரம் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தென்சென்னைக்கு முக்கியத்துவம் தருவதாகச் சொல்வார்கள்.

சும்மா காலாற நடந்து ஓய்வெடுக்கக் கூட வடசென்னையில் ஒரே ஒரு கடற்கரை மட்டுமே இருக்கிறது. ஆனால், தென் சென்னையில் பெசன்ட் நகர், திருவான்மியூர், கோவளம் எனப் பல பீச்கள் இருக்கிறது. இது வடசென்னை மக்களுக்குக் குறையாக இருக்கிறது.
திருவொற்றியூர் பீச்: ஆனால், இன்னும் சில மாதங்களில், வடசென்னை மொத்தமாக மாறப் போகிறது. இதுவரை தென்சென்னையில் இருப்போருக்கு மட்டுமே ஓய்வெடுக்க பல்வேறு பீச்கள் ஆப்ஷன்களில் கிடைத்த நிலையில், இப்போது வடசென்னை மக்களுக்கும் அட்டகாசமான ஒரு ஆப்ஷன் கிடைத்துள்ளது. வடசென்னையில் வசிப்பவர்கள் ஓய்வெடுக்க அழகான மற்றும் அமைதியான கடற்கரை இன்னும் சில மாதங்களில் கிடைக்க உள்ளது.
வடசென்னையில் இருக்கும் திருவொற்றியூர் பீச்சில் அதிரடி மாற்றங்கள் இன்னும் கொஞ்ச மாதத்தில் வர இருக்கிறது. இது வடசென்னை வாசிகளுக்கு வேற லெவல் சில் ஆப்ஷனை கிடைக்கும். திருவொற்றியூர் மொத்தமாக நவீன நடைபாதையாக மாற இருக்கிறது. கடலுக்கு மேல் கண்ணாடி தரைப்பாலம், பீச்சீல் ஜாலியாக நடக்க நடைபாதைகள், கடைகளை அமைக்கத் தனி பகுதி, , சைக்கிள் ஓட்டும் டிராக் மற்றும் பல செடிகொடிகளும் வர இருக்கிறது.
டெண்டர்: இதற்கான டென்டனரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கொண்டு கோரியிருக்கிறது. சுமார் 30 லட்சம் செலவில் மொத்தம் இரண்டு திட்டங்கள் அமையும் நிலையில், இதற்கான டெண்டரை விடுத்துள்ளது. மேலும், இந்த டெண்டருக்கான விரிவான விதிமுறைகளையும் பெருநகர வளர்ச்சி குழுமம் கொண்டு கேட்டுள்ளது. இது வடசென்னைக்கு வரும் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது.
பல அதிரடி திட்டங்கள்: வடசென்னை பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் வரும் நிலையில், அந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதாக இந்தத் திட்டம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இது மட்டுமின்றி வடசென்னை பகுதிகளுக்குப் பல வேற லெவல் திட்டங்களையும் தமிழக அரசு கொண்டு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்பெல்லாம் வளர்ச்சி தென்சென்னை மட்டுமே இருக்கும். ஆனால், வடசென்னைக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் இருக்காது என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பொதுவாக ரியல் எஸ்டேட் கடந்த காலங்களில் தென்சென்னை தான் முன்னிலையில் இருக்கும். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. வடசென்னையில் தான் ரியல் எஸ்டேட் முதலீடுகள் குவிகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டம்: 1,000 கோடி ரூபாய் செலவில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், ரியஸ் எஸ்டேட் குவிந்து வருகிறது. குறிப்பாக வட சென்னையில் மாதவரம், திருவொற்றியூர், பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, எண்ணூர், மணலி, ராயபுரம், சவுகார்பேட்டை, மூலக்கடை பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் கிட்டதட்ட இதையே தான் கூறுகிறார்கள். மேலும், தென் சென்னையுடன் ஒப்பிடும் போது வட சென்னையில் வீடுகள் விலை குறைவு என்பதாலும் பொதுமக்கள் பலரும் வடசென்னையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications